• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • Bigg Boss Tamil 5: பிக் பாஸ் வீட்டில் டான்ஸ் மாரத்தான்!

Bigg Boss Tamil 5: பிக் பாஸ் வீட்டில் டான்ஸ் மாரத்தான்!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

இதனிடையே நேற்று திங்கட்கிழமை என்பதால் வீட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் வழங்கப்பட்டது

 • Share this:
  பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் நமீதா மாரிமுத்து தனிப்பட்ட காரணங்களுக்காக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து நாடியா, அபிஷேக் மற்றும் சின்ன பொண்ணு அடுத்தடுத்த வாரங்களில் வெளியேறியுள்ளனர்.

  தற்போது 14 போட்டியாளர்கள் உள்ளனர். பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் நெருப்பு வாரம் இருந்தது போல இந்த வாரம் பஞ்சபூதங்களில் ஒன்றான 'நிலம் வாரம்' என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நிலம் காயின் வைத்திருக்கும் நிரூப் கட்டுப்பாட்டில் தான் இனி படுக்கை அறை இருக்கப்போகிறது. எனவே நிருப் அனுமதியின்றி யாரும் படுக்கை அறைக்கு செல்ல கூடாது, மீறினால் நீரூப் தண்டனை கொடுக்கலாம் என பிக் பாஸ் அறிவித்துள்ளார்.

  மேலும் நிரூப், அவருக்கு ஒரு உதவியாளரை நியமித்து கொள்ளலாம், தினமும் காலையில் என்ன சாப்பிட வேண்டும் அதனை யார் செய்து தர வேண்டும் என நிரூப் உத்தரவிடலாம் என எண்ணற்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடந்து நிரூப், அக்ஷராவை உதவியாளராக நியமிக்க விருப்பம் என கூறினார். இதனை ஏற்க அக்ஷரா ஆரம்பத்தில் மறுத்தார், இதனை தொடர்ந்து இருவரும் தனியாக அமர்ந்து பேசிய பின்னர் ஏற்றுக்கொண்டார். நேற்று நிரூப் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு வேடிக்கையான தண்டனைகள் கொடுத்து கலகலப்பாக்கினார்.

  இதனிடையே நேற்று திங்கட்கிழமை என்பதால் வீட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் சிபி மற்றும் ராஜு பங்கேற்ற நிலையில் சிபி வெற்றி பெற்றார். ஆனால் பஞ்சதந்திரம் டாஸ்கில் வெற்றி பெற்ற இசைவாணி, வருண், நிரூப், பாவ்னி மற்றும் ஸ்ருதியிடம் நாணயங்கள் இருப்பதால் அவர்களுக்கு வீட்டின் தலைவரை மாற்றி அமைக்கும் சக்தி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபியின் தலைவர் பதவியை மாற்றியமைக்க விரும்புகிறீர்களா? என பிக் பாஸ் அறிவித்தார். அப்போது வருண் தனது நாணயத்தை பயன்படுத்தி வீட்டின் தலைவராக தன்னை மாற்றி கொண்டார்.

  இதனால் வருண் இந்த வாரம் முழுவதும் வீட்டின் தலைவராக செயல்படுவார் என பிக் பாஸ் அறிவித்தார். இதனை தொடர்ந்து நாமினேஷன் நடைபெற்றது. ஆனால் தீபாவளியை முன்னிட்டு நாமினேஷன் வித்தியாசமாக நடைபெற்றது. அதில், எந்த இரண்டு நபர்கள் வெளியேறாமல் இருக்க வேண்டும் என நீங்கள் ஆசைப்படுகிறீர்களோ அவர்களை காப்பாற்றலாம் என மீண்டும் பிக் பாஸ் அறிவித்தார். மேலும் ஒவ்வொரு போட்டியாளர்களின் புகைப்படமும் ஒரு பெரிய ராக்கெட் வெடியில் ஒட்டி வைக்கப்பட்டு
  அதனை வெடித்தனர்.

  இதில் மூன்று வாக்குகள் பெற்றவர்கள் நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதில் பிரியங்கா, ராஜு, இமான், தாமரை ஆகிய நான்கு பேரை சக போட்டியாளர்கள் காப்பாற்றியுள்ளனர். மீதமுள்ள அக்ஷ்ரா, சிபி, நிரூப், மதுமிதா, ஐக்கி, பாவ்னி, இசைவாணி, அபினய், ஸ்ருதி ஆகிய ஒன்பது பேர் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் குறைவான வாக்குகள் பெற்றவர்கள் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்பதால் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  இந்தநிலையில் இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில், பிக் பாஸ் நிகழ்ச்சியை கலகலப்பூட்டும் வகையில் டான்ஸ் டாஸ்க் வழங்கப்படுகிறது. "சினிமா சினிமா" என்ற பெயரில் தொடங்கும் இந்த டாஸ்கில், ஹவுஸ் மேட்ஸ்களுக்கு தனித்தனி கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் கதாபாத்திரத்திற்கான பாடல் ப்ளே செய்யப்படும் போதெல்லாம் நீங்கள் எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வந்து நடனம் ஆட வேண்டும் என பிக்பாஸ் அறிவிக்கிறார். சிபிக்கு - ரஜினிகாந்த், வருண் - ரோபோ, இசைவாணி - சந்திரமுகி, மது - புலிகேசி கதாபாத்திரலும் இருப்பது ப்ரோமோவில் தெரிகிறது. இதனால் இன்றைய நிகழ்ச்சி கலகலப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Shalini C
  First published: