Home /News /entertainment /

பணத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் சிபி?

பணத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் சிபி?

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

ப்ரோமோவில் சிபி 12 லட்ச ரூபாய் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறப் போவதாக முடிவு செய்துள்ள காட்சிகள் உள்ளன.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 5 இல், தற்போது ராஜு ஜெயமோகன், பிரியங்கா, பாவனி, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் மற்றும் அமீர் ஆகிய 7 போட்டியாளர்கள் இறுதி கட்ட போட்டியை எதிர்கொண்டுள்ளனர். அடுத்த வாரம் சீசன் ஃபினாலே நடைபெற உள்ள நிலையில், இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார், அதை விட, பணப்பெட்டியை எடுக்கப் போவது யார் என்று பரபரப்பாக இருக்கிறது.

    சூட்கேஸ் டாஸ்க் தொடர்ந்து நாலாவது நாளாக இன்றும் நடந்து வருகிறது. 3 லட்ச ரூபாயுடன் தொடங்கிய டாஸ்க் இப்போது 12 லட்ச ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 3 மற்றும் 4, இரண்டு சீசன்களிலும் சூட்கேஸ் டாஸ்க்கில் 5 லட்ச ரூபாய் அறிவிக்கப்பட்ட போதே, இறுதி கட்டத்தில் இருந்த போட்டியாளர்கள் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார்கள். ஆனால், தற்போது 12 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இருந்தும் பணப்பெட்டியை எடுத்துச் செல்லலாமா வேண்டாமா என்று போட்டியாளர்கள் முடிவு செய்யவில்லை.

    11 லட்ச ரூபாய் பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறப் போவதாக அமீர் எல்லாரிடமும் சொல்லிக்கொண்டிருந்தார். அமீர் வெளியேறப் போவதாகக் கூறிய போது, அவரை கட்டியணைத்து வாழ்த்துகள் சொல்கிறார் சிபி. இரண்டாவது புரோமோவில் அமீர் வீட்டை விட்டுச் செல்லப் போவதாக பிரான்க் செய்வதாக காட்சிகள் உள்ளன. எனவே. அமீர் பணத்தை எடுத்துக் கொண்டு செல்ல மாட்டார் என்றே தோன்றுகிறது.

    தற்போது வெளியான புரோமோவின் படி, சிபி 12 லட்ச ரூபாய் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறப் போவதாக முடிவு செய்துள்ள காட்சிகள் உள்ளன.

    12 லட்ச ரூபாய் வைக்கப்பட்டுடன் சிபி நிரூப்பை அழைக்கிறார். பின்பு, தாமரை சிபியிடம் இன்னும் ஒரு வாரம் தானே இருந்துவிட்டு போகலாம் என்று கூறுகிறார். அடுத்ததாக, சிபி பணப்பெட்டி இருக்கும் இடத்திற்கு செல்கிறார். தாமரையிடம் அவர் பணம் எடுக்க விரும்புகிறாரா என்று கேட்டதற்கு தாமரை விருப்பம் இல்லை என்று பதில் சொல்கிறார். அடுத்ததாக, பிரியங்கா இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணா, இன்னும் அமௌன்ட் ஏறும் என்று சிபியை இன்னும் கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொல்லும் போது, ‘அமவுண்ட்டுக்காக இல்ல, எனக்கு போகணும்னு மைண்ட் செட் ஆகிருச்சு. எனக்கு சுத்தமா கான்ஃபிடன்ஸ் போயிடுச்சு, ஏன்னு தெர்ல’ என்று கூறும் காட்சிகள் உள்ளன.



    கடந்த வாரம் நாமினேஷனில் இருந்து கடைசி நபராக ‘சேவ்’ செய்யப்பட்டது சிபி. எனவே, மக்களின் ஆதரவு அவருக்கு குறைவாக இருக்கிறது என்பதால் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படும் வாய்ப்பு அதிகம் என்று நினைத்திருக்கலாம். சிபி பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினாரா என்பதை இன்று இரவு நிகழ்ச்சியில் பார்க்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி