• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: 'இது ரொம்ப தப்பு...’ சிபியால் மனம் நொந்த அக்‌ஷரா

Bigg Boss Tamil 5: 'இது ரொம்ப தப்பு...’ சிபியால் மனம் நொந்த அக்‌ஷரா

அக்‌ஷரா

அக்‌ஷரா

இந்த வார தலைவருக்கான போட்டியில் பொம்மலாட்டம் டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா இருவரும் அடுத்தடுத்த இரண்டு வாரங்களில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட, பாடகி சின்னப்பொண்ணு கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் நேற்று சுருதி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், இந்த வார தலைவருக்கான போட்டியில் பொம்மலாட்டம் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதில் பொம்மைகள் வைக்கப்பட்டு, கூடவே தலைவருக்கு போட்டியிடுபவர்களின் படங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. யார் தலைவராக வேண்டாம் என நினைக்கிறார்களோ அவர்களின் பொம்மை தலையில் இருக்கும் மண் சட்டியை உடைக்க வேண்டும். அப்போது, ‘எனக்கு எந்த வாய்ப்பும் இல்லை’ என அக்‌ஷரா சொல்ல, சிபி அவரது பொம்மை தலையை அடித்து உடைக்கிறார்.



    இதனால் சோகமான அக்‌ஷரா, ’இது ரொம்பவே தப்பு’ என வருணிடம் சொல்லி அழுகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: