• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • என் கேரக்டர் என்னவோ அப்படித்தான் இருப்பேன்... அக்‌ஷராவுக்கு பதிலடி கொடுத்த சிபி

என் கேரக்டர் என்னவோ அப்படித்தான் இருப்பேன்... அக்‌ஷராவுக்கு பதிலடி கொடுத்த சிபி

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

தற்போது வெளியாகியுள்ள 3-வது ப்ரோமோவில் அக்ஷரா பள்ளி சீருடையில் தயாராகி இருக்கிறார். இருப்பினும் டாஸ்கில் பங்கு பெறவில்லை.

  • Share this:
    பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நேற்றிலிருந்து போட்டியாளர்களுக்கு கனா காணும் காலங்கள் என்ற ஸ்கூல் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

    அதில், சிபி மிக ஸ்ட்ரிக்ட்டான வார்டனாக செயல்படுகிறார். அவரை தவிர ராஜு, அபிஷேக், அமீர் ஆகியோர் ஆசிரியர்களாக உள்ளனர். சிபி மாணவர்களாக இருக்கும் போட்டியாளர்களுக்கு மிக கடுமையான பனிஷ்மெண்டுகளை வழங்கி வருகிறார். அதனை கொஞ்சம் கூட மதிக்காத மாணவியாக பிரியங்கா நடந்துகொள்ள, அவரை வீட்டிற்கு வெளியே அனுப்பி விடுகிறார் சிபி.

    அதேபோல அவரது கடுமையான விதிகள் இன்றும் தொடர்கிறது. அதன்படி 52-ம் நாளான இன்று வெளியான முதல் ப்ரோமோவிலேயே சிபிக்கும் அக்ஷராவுக்கும் இடையே சண்டை வெடித்தது. சிபியின் கண்டிஷனால் கடுப்பான அக்ஷரா கோபமாக பாத்ரூமில் இருந்த பூத்தொட்டியை தட்டிவிடுகிறார்.

    வெளியான 2-வது ப்ரோமோவில், அக்ஷரா மிகவும் கோபமாக சிபியிடம் கத்துகிறார். மேலும், சிபியிடம் பேச விருப்பம் இல்லை என்றும், கடுப்பாகிவிடுவேன் எனவும் கோபத்துடன் தெரிவிக்கிறார். அங்கு வரும் ராஜுவிடமும் கடிந்து கொள்கிறார். அக்ஷராவிடம் பேச்சு கொடுக்கும் ராஜூவை பார்த்து " ஓவரா பண்ணாதீங்க, போதும்" என்கிறார்.

    ராஜுவும் பதிலுக்கு யாரு ஓவராக பண்ணீட்டு இருக்கா? என்று கேட்க நீயும், சிபியும் தான் என அக்ஷரா மிக கோபமாக பதிலளிக்கிறார். மிகுந்த ஆத்திரத்துடன் இருக்கும் அக்ஷராவை பிக்பாஸ் கன்பெஷன் ரூமுக்கு அழைக்கிறார். அதோடு இரண்டாவது ப்ரோமோவும் முடிகிறது.



    இதனிடையே, தற்போது வெளியாகியுள்ள 3-வது ப்ரோமோவில் அக்ஷரா பள்ளி சீருடையில் தயாராகி இருக்கிறார். இருப்பினும் டாஸ்கில் பங்கு பெறவில்லை. தனியாக அமர்ந்திருக்கும் அக்ஷராவிடம் சிபி பேசுகிறார். அப்போது சிபியிடம் பேசும் அக்ஷரா கூறியதாவது, "நீங்க பேசறது, நீங்க பண்றதுலாம் கொஞ்சம் தேவையில்லாம இருக்கு.. இதுக்கு மேலே எனக்கு பேச விருப்பம் கிடையாது" என்று சொல்கிறார்.

    உடனே சிபி, " அதனால தான் நீங்க பூத்தொட்டியை தூக்கிப்போட்டு உடைச்சுடீங்களா?" என்று கேட்க அக்ஷராவும் ஆமாம் என்று சொல்கிறார். இதனை தொடர்ந்து பேசிய சிபி, "சரி இப்போ நீங்க கேமுக்கு வறீங்களா? இல்லையா? என்பதை சொல்லிடுங்க, அதுக்கேத்தமாரி பண்ணிக்கலாம். உங்கள மட்டும் தனியா ஏதும் பண்ணல, எல்லாத்தையும் பண்றத தான் பண்றேன். அப்டித்தான் இருக்கும், உங்களுக்கு ஓகே என்றால் கேமுக்கு வாங்க. இல்லையென்றால், உங்கள் இஷ்டபடி இருங்க. எனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர் எப்படியோ, நான் அப்படித்தான் இருப்பேன்" என்று கூறிவிட்டு அந்த இடத்தில் இருந்து சிபி கிளம்பிவிடுகிறார். அதோடு ப்ரோமோ முடிகிறது.

    அதோடு இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸில் பிரியங்கா, தாமரை, நிரூப், இமான், பாவனி மற்றும் ஐக்கி பெரி ஆகியோர் உள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: