• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: பிக் பாஸ் கொடுத்த வித்தியாச டாஸ்க் - தோற்பவர்களுக்கு பாகற்காய் ஜூஸ் தண்டனை!

Bigg Boss Tamil 5: பிக் பாஸ் கொடுத்த வித்தியாச டாஸ்க் - தோற்பவர்களுக்கு பாகற்காய் ஜூஸ் தண்டனை!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

தாமரை - இசைவாணி இடையே இன்றும் மோதல் தொடர்வது இன்றைய முதல் ப்ரோமோவில் தெரிந்தது.

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசன் 46 நாட்களை கடந்து சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தினமும் டாஸ்குகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த இரண்டு நாட்களாக ’உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி’ என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. அதில், போட்டியாளர்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு, டீம் ஏ கண்ணாடியாக மாறி, டீம் பி-யினரை பிரதிபலிக்க வேண்டும் என பிக் பாஸ் அறிவித்தார். மேலும் இந்த டாஸ்கில் லிங்கிங் எரியாவில் ஜோடிகளாக பிரிக்கப்பட்ட இருவரும் கைக்கோர்த்து சேர்ந்து நின்று ஒருவர் பற்றிய கருத்துக்களை சொல்ல வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    தற்போது இரண்டாவது சுற்று நடைபெற்று வரும் நிலையில், அபினய் - சிபியின் கண்ணாடியாகவும், இமான் - ஐக்கியின் கண்ணாடியாகவும், வருண் - நிரூப்பின் கண்ணாடியாகவும், ராஜு - பிரியங்காவின் கண்ணாடியாகவும், அக்ஷ்ரா - பாவ்னியின் கண்ணாடியாகவும், தாமரை - இசைவாணியின் கண்ணாடியாகும் பிரதிபலித்து வருகின்றனர்.

    இரண்டாவது சுற்றில் இதுவரை ராஜு குறித்து பாவ்னியும், பிரியங்கா குறித்து ராஜுவும், ஐக்கி குறித்து இமானும், பாவ்னி குறித்து அக்ஷ்ராவும், நிரூப் குறித்து வருணும் பேசினர். இதனை தொடர்ந்து இசைவாணி குறித்து தாமரை பேசினார். அப்போது “எனக்கு எதுவுமே புரியலைன்னு சொல்வீங்க. உனக்கு புத்தி சொல்ற அளவுக்கு எனக்கு நிறையவே புத்தி இருக்கு என்றார் தாமரை. மேலும் இசைவாணியை பார்த்து தாமரை கிண்ணங்கள்... " என்ற பாடலையும்,"சிரித்து சிரித்து மயக்கி... " என்ற பாடலையும் பாடினார். இதனால் கடுப்பான இசை, என்ன நக்கலாக பாட்டு பாடுகிறாய்? என கேட்டதால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இந்த மோதல் இன்றும் தொடர்வது இன்றைய முதல் ப்ரோமோவில் தெரிந்தது. அதில், 'என் கேள்விக்கு என்ன பதில்’ என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அப்போது தாமரை - இசைவாணி இடையே போட்டி நடைபெறும் நிலையில் பிக் பாஸ் வீட்டில் நடந்த சில விஷயங்களின் அடிப்படையில் கேள்வி எழுப்பப்படுகிறது. அதற்கு பதில் தெரியவில்லை என்றால் எதிர்நபர் அவரது தலையில் முட்டையை உடைக்க வேண்டும் என கூறப்படுகிறது. இந்த டாஸ்கில் தாமரை - இசை இவரும் மாறி மாறி தலையில் முட்டையை உடைத்து கொள்கின்றனர்.

    இந்தநிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், "உள்ளே வெளியே" என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இதில் இமான் - ஐக்கி மற்றும் பிரியங்கா - ராஜு இடையே போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியிடும் இருவர் எதிரணியில் நின்று கொள்ள வேண்டும், நடுவில் ஒரு குடுவையில் தண்ணீர் நிரப்பட்டுள்ளது, இதற்குள் ஒரு சிறிய பந்தை போட வேண்டும் என கூறப்படுகிறது. பந்து குடுவையில் விழவில்லை என்றால் பாகற்காய் ஜூஸ் குடிக்க வேண்டும் என கூறப்படுகிறது.



    அதன்படி இமான், ராஜு, பிரியங்கா பாகற்காய் ஜூஸ் குடிப்பது ப்ரோமோவில் தெரிகிறது. மேலும் இந்த டாஸ்க்கிலும் வருண் - நிரூப் இடையே பிரச்னை ஏற்படுகிறது. இந்த டாஸ்க் 'உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி’ டாஸ்கில் பிரியங்கப்பட்ட அதே இரண்டு அணியினர் போட்டியிடுவது தெரிகிறது. மேலும் இன்றும் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடிக்காத நபருடன் போட்டியிட இருப்பதால் பரபரப்பரப்பிற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: