• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: இசைவாணியை எச்சரிக்கும் பிக் பாஸ் - நடந்தது என்ன?

Bigg Boss Tamil 5: இசைவாணியை எச்சரிக்கும் பிக் பாஸ் - நடந்தது என்ன?

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

இதனிடையே இந்த வாரம் நெருப்பு நாணயத்திற்கான வாரம் என்பதால், இந்த நாணயத்தை வைத்துள்ள இசைவாணியை எச்சரிக்கிறார் பிக் பாஸ்.

  • Share this:
    பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தினமும் டாஸ்க் கொடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரம் பஞ்சதந்திரம் என்ற டாஸ்க் ஒன்று வழங்கப்பட்டது. அதில், நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என ஐந்து நாணயங்கள் கொடுக்கப்படும். அந்த நாணயத்தை சக போட்டியாளர்களுக்கு தெரியாமல் எடுத்து மறைத்து வைத்து கொள்ள வேண்டும்.

    அப்படி எடுத்த நாணயத்தை அவருக்கே தெரியாமல் மற்றவர்கள் திருடியும் வைத்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த டாஸ்கில் பாவ்னி, இசைவாணி, நிரூப், தாமரை மற்றும் வருண் ஆகிய ஐந்து பேரும் வெற்றி பெற்றனர். மேலும் இந்த நாணயங்களை இப்போதும் யார் வேண்டுமானாலும் திருடலாம் என்பதால் நாணயத்தை வைத்திருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பிக் பாஸ் அறிவித்துள்ளார்.

    இந்தநிலையில் நேற்று தாமரை செல்வியின் நாணயத்தை பாவ்னி உதவியுடன் ஸ்ருதி திருடி விட்டார். இது பெரும்பிரச்சனையாக மாறி விட்டது. நாணயத்தை திருட வேண்டும் என்பது தான் விளையாட்டு என்றாலும், தாமரை செல்வி உடை மாற்றும் அறையில் இருந்தபோது அங்கு சென்ற பாவ்னி, துண்டை கொண்டு அவர் பார்க்காதவாறு மறைத்து கொள்ள ஸ்ருதி நாசுக்காக அதனை திருடி விட்டார். இதனை அறிந்து கடுப்பான தாமரை உடை மாற்றி கொண்டிருக்கும் அறைக்கு உங்களை நம்பி விட்ட என்னை ஏமாற்றி எடுத்தது தவறு, அப்போது நான் கத்த கூட முடியாத நிலையில் இருந்தேன் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவை சக ஹவுஸ் மேட்ஸ் சிலரும் உடை மாற்றி கொண்டிருக்கும் போது எடுத்தது தவறு என கூறினார் . இதனால் நேற்றைய நிகழ்ச்சி முழுவதும் தாமரை, ஸ்ருதி மற்றும் பாவ்னி மூவரும் மாறி மாறி அழுது கொண்டிருந்தனர்.

    இதனிடையே இந்த வாரம் நெருப்பு நாணயத்திற்கான வாரம் என்பதால், இந்த நாணயத்தை வைத்துள்ள இசைவாணி சமையலறையை கட்டுப்படுத்துவார் என பிக் பாஸ் அறிவித்தார். அதாவது என்ன சமைப்பது, எவ்வளவு பொருட்கள் பயன்படுத்துவது என்பது உட்பட அனைத்தையும் இசைவாணி முடிவெடுப்பார் என கூறப்பட்டது. மேலும் இது நெருப்பு நாணயத்திற்கான வாரம் என்பதால் இந்த வாரம் இசைவாணியின் நாணயத்தை மட்டும் யாரும் திருட கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. என்னதான் இசைவாணிக்கு பவர் கொடுக்கப்பட்டாலும் அவரை கேட்டு யாரும் சமையலறையை பயன்படுத்தவில்லை. வழக்கம் போலவே இருந்தது. இதனை பார்த்து கடுப்பான இசைவாணி தனியாக அமர்ந்து, என்னை யாரும் எதுவும் கேட்கவில்லை என புலம்பி கொண்டிருந்தார்.

    மேலும் படிக்க -  பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஷினிக்கு பதில் இனி இவரா?



    இந்த நிலையில் இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில், ஹவுஸ் மேட்ஸ்சிற்கு ஸ்னாக்ஸ்கள் கொடுக்கப்படுகிறது. அதனை எடுத்து கொள்ள அனைவரும் போட்டிபோட்டு கொண்டிருக்கும் நிலையில் இசைவாணி மட்டும் தனியாக இருக்கிறார். அப்போது இசைவாணியை அழைக்கும் பிக் பாஸ், இந்த வாரம் நெருப்பு ஆற்றலை குறிக்கும் நாணயம் உங்களிடம் உள்ளது, உங்களுக்கு கொடுக்கப்பட்ட சக்தியை இன்னும் முறையாகவும், சுவாரஸ்யமாகவும் பயன்படுத்தவில்லை என கூறுகிறார். இதனை தொடர்ந்து வெளியே வரும் இசைவாணி, உணவு பொருட்களை நீங்கள் எடுப்பது தவறு என கூறும் காட்சிகள் உள்ளது. இதனால் இன்று இசைவாணி புதிய ரூல்ஸ் போடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: