• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வெற்றி இறுதி இலக்கு அல்ல... கமல்ஹாசனின் அறிவுரையுடன் பிக் பாஸ் 5!

வெற்றி இறுதி இலக்கு அல்ல... கமல்ஹாசனின் அறிவுரையுடன் பிக் பாஸ் 5!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

ட்விஸ்டுடன் கமல் பேசும் புரமோ இன்றைய நிகழ்ச்சி குறித்த ஆர்வத்தை தூண்டியுள்ளது.

  • Share this:
    வெற்றிக்கான ஃபார்மூலா என்ன என்ற கமல்ஹாசனின் அறிவுரையுடன் பிக் பாஸ் சீசன் 5 வீக் எண்ட் புரமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. போட்டி தொடங்கி 7 நாட்கள் முடியவுள்ள நிலையில் வாரத்தின் இறுதி நாளான இன்று 18 போட்டியாளர்கள் உடன் கமல்ஹாசன் இன்று உரையாடவுள்ளார். இந்த வாரத்தில் நடந்த சண்டை, அன்பு, டாஸ்க் குறித்து இன்று போட்டியாளர்களுடன் கலந்துரையாடுவார். தற்போது இந்த சீசனில் முதல் லக்ஸுரி டாஸ்காக "ஒரு கத சொல்லட்டுமா?" என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று இதுவரை பேசாத அபிஷேக், பிரியங்கா, நிரூப். அபிநவ், தமிழ் செல்வி ஆகியோர் பேசவுள்ளனர்.

    இந்த சீசனில் பிரியங்கா மற்றும் ராஜு நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்கின்றனர்.கதை சொல்லட்டுமா டாஸ்கில் இதுவரை பேசியவர்களில் நமீதா மாரிமுத்து, பாவனி, ஸ்ருதி கதைகள் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்களை கண்கலங்க வைத்தது. அதிலும் பாவனி கணவரின் தற்கொலை, நமீதா திருநங்கையாக மாறியது அவர் பட்ட வேதனைகள் குறித்தும் கமல்ஹாசன் இன்றைய நிகழ்ச்சியில் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவையில்லாத சண்டைக்கு காரணமான தாமரை செல்வியின் சிரிப்புக்கும் இன்று அட்வைஸ் உண்டு.

    விளையாட்டு வில்லங்கமானது... எல்லை மீறிய நமீதாவின் வார்த்தைகள்! கண்ணீர் விட்ட தாமரை

    இந்நிலையில் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் கமல்ஹாசன் வழக்கம் போல் கோட் சூட்டுடன் வருகிறார்.”வெற்றிக்கான ஃபார்மூலா தடைகளை உடைத்து முன்னேறுவது. வெற்றி இறுதி இலக்கு அல்ல. இவர்கள் முன்னேறுகிறார்களா?” என்று ட்விஸ்டுடன் கமல் பேசும் புரமோ இன்றைய நிகழ்ச்சி குறித்த ஆர்வத்தை தூண்டியுள்ளது.



    வெள்ளிக்கிழமை அன்று பிக் பாஸ் இல்லத்தில் நடந்ததை இன்றைய எபிசோடில் பார்க்கலாம். முதல் டாஸ்கில் போட்டியாளர்கள் வாங்கிய மதிப்பெண்களும் இன்று தெரிந்துவிடும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: