Home /News /entertainment /

பிக் பாஸ் ரேஸ் நிறைவு... இறுதிக்கட்ட நாமினேஷன் பட்டியல் வெளியீடு

பிக் பாஸ் ரேஸ் நிறைவு... இறுதிக்கட்ட நாமினேஷன் பட்டியல் வெளியீடு

பிக் பாஸ்

பிக் பாஸ்

தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், இந்த வார நாமினேஷனில் இருப்பவர்களின் பெயர்களை பிக் பாஸ் அறிவிக்கிறார்.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :
    பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது ராஜு, பிரியங்கா, தாமரை, நிரூப், பாவ்னி, அபிநய், அமீர், அக்ஷ்ரா, வருண், சஞ்சீவ், சிபி ஆகிய 11 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வாரம் இவர்கள் 11 பேருமே நாமினேஷனில் இருப்பதாக பிக் பாஸ் அதிரடியாக அறிவித்தார். ஆனால் இந்த நாமினேஷன் பட்டியலில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள தினமும் டாஸ்குகள் வழங்கப்படும். அதில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷனில் இருந்து விலகுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

    அதன்படி நடந்த முதல் டாஸ்கில் சிபி, இரண்டாவது டாஸ்கில் நிரூப் வெற்றி பெற்றதால் இருவரும் நாமினேஷன் பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து நாமினேஷன் லிஸ்டில் உள்ள பிரியங்கா, ராஜூ, வருண், அக்‌ஷரா, தாமரை, அமீர், சஞ்சீவ், பாவனி, அபினய் ஆகிய 9 பேருக்கும் டாஸ்குகள் வழங்கப்பட்டது.

    ஒவ்வொரு டாஸ்க்கிலும் தோல்வியடையும் ஒருவர் இந்த டாஸ்கில் இருந்து வெளியேற வேண்டும் என கூறப்பட்டது. அதன்படி சஞ்சீவ், வருண், பிரியங்கா, பாவ்னி, அக்ஷ்ரா அடுத்தடுத்தது நடைபெற்ற டாஸ்குகளில் இருந்து தோல்வியடைந்ததால் வெளியேற்றப்பட்டனர்.

    மீதமுள்ள ராஜு,அபிநய், அமீர், தாமரை ஆகியோருக்கு நேற்று 5 கட்ட தடைகள் அடங்கிய டாஸ்குகள் வழங்கப்பட்டது. முதலில் ஒரு வாட்டர் பாட்டில் நிறைய இருந்த தண்ணீரை முழுமையாக கீழே சிந்தாமல் குடிக்க வேண்டும், பின்னர் வேலிகளால் அமைக்கப்பட்டிருக்கும் தடைகளை தரையில் ஊர்ந்து கடக்க வேண்டும், மூன்றாவதாக பிக் பாஸ் லோகோ இருந்த பஸில்களை சரியாக அமைக்க வேண்டும், நான்காவதாக சாக்கின் உள்ளே நின்றவாறு குதித்து எதிர் திசைக்கு செல்ல வேண்டும், ஐந்தாவதாக 3 முட்டையை எடுத்து கீழே சிந்தாமல் குடிக்க வேண்டும் என கூறப்பட்டது.

    இதில் முதல் அமீர் அனைத்து டாஸ்குகளையும் கடந்து வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து அபிநய், தாமரை வெற்றி பெற்ற நிலையில், அனைத்து தடைகளையும் கடந்த ராஜு முட்டையை குடிக்க முடியாமல் திணறினார். எனினும் அவர் முயற்சி செய்த நிலையில் அவருக்கு முதல் முட்டை குடித்தபோதே வாந்தி வந்ததால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

    இதனை தொடர்ந்து அபிநய், தாமரை, அமீர் ஆகியோருக்கு அடுத்த டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் மாட்டு சாணம் நிறைந்த பெட்டி ஒன்றில் போட்டியாளர்கள் இறங்கி அதில் இருக்கும் நாணயங்களை சேகரிக்க வேண்டும் என பிக் பாஸ் அறிவித்தார். அதன்படி போட்டியார்கள் மூவரும் சாணத்திற்குள் கைகளை விட்டு நாணயத்தை எடுத்தனர். இறுதியாக தாமரை அதிக நாணயங்களை எடுத்து வெற்றி பெற்றார், அமீர் தோல்வியடைந்ததால் வெளியேற்றப்பட்டார். இறுதியாக அபிநய் மற்றும் தாமரைக்கு கார்ட்ஸ் டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் யாருக்கு இரண்டு ராங்க் மார்க் போடப்பட்ட கார்டு வருகிறதோ அவர் தோல்வியடைவார் என கூறப்பட்ட நிலையில், அபிநய் தோல்வி அடைந்தார். இறுதியாக அனைத்து டாஸ்குகளையும் அசால்டாக கடந்து தாமரை நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் இன்று தோல்வியடைந்தவர்களுக்கு மீண்டும் ஒரு டாஸ்க் வழங்கப்படும் காட்சிகள் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இருந்தது. அதில் இதுவரை வெற்றிபெற்ற சிபி, நிரூப் , தாமரையை தவிர மீதம் உள்ள 8 போட்டியாளர்களும் ஜோடியாக பிரிந்து யாரை காப்பாற்ற வேண்டுமோ அவர்களது புகைப்படத்தை காட்ட வேண்டும். இதில் இருவருமே ஒரே புகைப்படங்களை தேர்வு செய்து காட்ட வேண்டும் என கூறப்படுகிறது. இதில் அபிநய் - பிரியங்கா, அமீர் - பாவ்னி, அக்ஷ்ரா - வருண், ராஜு - சஞ்சீவ் ஜோடியாக பிரிந்திருக்கின்றனர்.

    அப்போது என் ஃபேமிலி வர வரைக்குமாவது நான் இந்த வீட்ல இருக்க விரும்புறேன் என்கிறார் சஞ்சீவ். இதேகாரணத்தை கூறி சஞ்சீவின் புகைப்படத்தையே காட்டுகிறார் ராஜு. மேலும் வருண், அக்ஷ்ராவின் புகைப்படத்தையும், பாவ்னி - அமீர் புகைப்படத்தையும் காட்டும் காட்சிகள் இருந்தது.


    இந்தநிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், இந்த வார நாமினேஷனில் இருப்பவர்கள் பெயர்களை பிக் பாஸ் அறிவிக்கிறார். அதில், அபிநய், பிரியங்கா, பாவ்னி, வருண், அக்ஷ்ரா மற்றும் ராஜு என அறிவித்துள்ளார். இதனால் முதல் ப்ரோமோவில் நடந்த டாஸ்கில் சஞ்சீவ், அமீர் கைப்பற்றப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. எனவே இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி