ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார்? நிரூப் கணிப்பு!

பிக் பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார்? நிரூப் கணிப்பு!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

முன்னதாக நேற்று இசை மற்றும் பாவனி ஒன்றாக அமர்ந்து பேசி கொண்டிருந்த போது வீட்டில் சிலர் குரூப்பாக இருக்கின்றனர்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், நமீதா வெளியேறியதால் தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர். வெற்றிகரமாக முதல் வாரத்தை கடந்துள்ள நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் வீட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் பலூன் டாஸ்க் வழங்கப்பட்டது.

அதில் கடைசி வரை தாமரை செல்வியின் பலூன் உடையாமல் இருந்ததால் அவர் வெற்றி பெற்று வீட்டின் முதல் தலைவராகியுள்ளார். பின்னர் வீட்டில் அவர் தலைமையில் அணிகள் பிரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த சீசனின் முதல் நாமினேஷன் தொடங்கியது. நாமினேஷன் லிஸ்டில் பாவ்னி மற்றும் வீட்டின் தலைவரான தாமரை செல்வியை தவிர அனைவரும் இடம் பெற்றுள்ளனர்.

அதன்படி இசைவாணி, ராஜு, மதுமிதா, அபிஷேக் ராஜா, பிரியங்கா, அபினய் , சின்ன பொண்ணு, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, சிபி சந்திரன், நிரூப் ஆகிய 15 பேர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் பிரியங்கா, நிரூப், ராஜு ஆகியோர் வலுவான போட்டியாளர்கள் என்பதால் நாமினேட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் 15 பேரில் குறைந்த வாக்குகள் பெறுபவர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார் என்பதால் யார் வெளியேறுவார்? என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

முதல் வாரத்தில் லக்ஸூரி டாஷ்காக ஒரு கத சொல்லட்டுமா? என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் தங்களது வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள், வெற்றி குறித்து பேசினார்கள். மேலும் ஒருவர் பேசி முடித்தவுடன் அவர்கள் கூறிய கதைக்கு டிஸ்லைக்ஸ், லைக்ஸ், ஹார்ட் கொடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று அக்ஷரா அவரது கதை குறித்து கூறுவது இன்று வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் தெரிகிறது.

மேலும் அவருக்கு பிரியங்கா, நிரூப் மற்றும் அபிஷேக் ஆகியோர் டிஸ்லைக் கொடுத்துள்ளனர். பின்னர் தனியாக அமர்ந்து மூவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். நாம் டிஸ்லைக் கொடுத்தது எதிர்பாராமல் நடந்தது, ஆனால் மூவரும் ஒன்றாக கொடுத்ததால் பிரச்னை எழ வாய்ப்புள்ளதாக பேசி கொண்டிருக்கின்றனர். அப்போது அபிஷேக் ஆனால் இது ஆரம்பம் தான் இன்னும் நிறைய இருக்கிறது என்கிறார், அதற்கு நிரூப் அதற்குள் நீ சென்றுவிடுவாய் என கலாய்த்து கொண்டிருக்கிறார். நிரூப் கணித்தது போல அபிஷேக் இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேறுவாரா? என காத்திருந்து பார்க்கலாம்.

முன்னதாக நேற்று இசை மற்றும் பாவ்னி ஒன்றாக அமர்ந்து பேசி கொண்டிருந்த போது வீட்டில் சிலர் குரூப்பாக இருக்கின்றனர். நாம் அவர்களிடம் சென்று ஏதாவது பேசினால் கூட அதனை தவிர்த்து விட்டு வேறு பேசுவார்கள் கவனித்திருக்கிறேன் என கூறினார். இதனால் பிக் பாஸ் வீட்டில் கடந்த சீசனை போலவே இந்த சீசனிலும் குரூப்பிஸம் பிரச்சனைகள் எழ வாய்ப்புகள் இருப்பது போல தெரிகிறது. ஒருவேளை இந்த பிரச்னை பெரிதானால் இதுகுறித்து வரும் வார இறுதி எபிசோடுகளில் கமல் இதுகுறித்து பேச வாய்ப்புகள் உள்ளது.

இன்றைய முதல் ப்ரோமோவில், நாடியா இந்த சீசன் வனிதா என அபிஷேக் விமர்சிக்கிறார். மேலும் ஐக்கியை எல்லோரும் வினோத பிறவியாக பார்க்க வாய்ப்பு இருக்கிறதே தவிர டக்குனு அவளுடன் அட்டாச் ஆக முடியாது, பாவனி ஏன் நாமினேஷன் இல் வரவில்லை என்றால் அவருடைய கதை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இசைவாணியின் வாழ்க்கையில் சோகம் இருக்கு, ஆனால் அதை அடிக்கடி சொல்லி காட்டுகிறார் என கூறும் காட்சிகள் உள்ளது. இதனால் அபிஷேக் ஜோசியம் பார்ப்பது போல பேசுவதாக பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bigg Boss Tamil 5