• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Promo: கணவர் தற்கொலையால் அதிர்ச்சி - இசைவாணியிடம் வருந்தும் பாவனி!

Bigg Boss Promo: கணவர் தற்கொலையால் அதிர்ச்சி - இசைவாணியிடம் வருந்தும் பாவனி!

பாவனி ரெட்டி

பாவனி ரெட்டி

அறிமுக நிகழ்ச்சியில் பேசிய பாவ்னி, திருமணம் செய்து கொண்டு கணவர், குழந்தைகள் என மகிழ்ச்சியாக வாழ நினைத்தேன். ஆனால் அது எனக்கு கிடைக்கவில்லை என கூறியிருந்தார்.

  • Share this:
    விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

    நேற்றைய முதல் நாள் நிகழ்ச்சியில் அணிகள் பிரிக்கப்பட்டது. அதில் ராஜு, நமீதா, பாவ்னி, சின்ன பொண்ணு ஆகியோர் தலைவர்களாக இருக்கின்றனர். தற்போது முதல் வாரம் என்பதால் விருப்பத்தின் அடிப்படையில் இந்த தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் இன்று ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியில் முதல் டாஸ்க்காக "கடந்து வந்த பாதை" டாஸ்க் கொடுப்பது தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ மூலம் உறுதியாகியுள்ளது.

    இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில், பேசும் இசைவாணி தனது அப்பா துறைமுகத்தில் பணியாற்றியதாகவும், தனது அப்பாவுக்கு வேலை போனதும், சம்பளம் இல்லாமல் வீட்டிற்கு வாடகை கூட கொடுக்க முடியாமல் போனதாகவும், வீடு இல்லாமல் ஒவ்வொரு வீடாக விரட்டினார்கள் என கண்ணீர் விட்டப்படியே கூறிய காட்சிகள் இருந்து. அதனை தொடந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில், சின்னப்பொண்ணு தனது கஷ்டத்தை கூறியது குறித்து ராஜு பேசுவது தெரிகிறது.

    அனைவரும் சூப்பர் என கைகொடுத்தால் நாம் வளர மாட்டோம். நடுவில் ஒரு சுவர் இருந்தால் தான் அதனை உடைக்க நினைப்போம், இதனை நீங்கள் உடைத்து மேலே வர வேண்டும் என அவர் கூறி இருந்தார். இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில், கார்டன் ஏரியாவில் அமர்ந்து இசைவாணி மற்றும் பாவ்னி பேசி கொண்டு இருக்கின்றனர்.



    அப்போது பாவனி கணவர் குறித்து பேசும் அவர், என் கணவர் தற்கொலை செய்து கொண்ட போது நான் அதிர்ச்சியடைந்தவாறு இருந்தேன். அதற்கு பிறகு நான் அழுவதே கிடையாது. அவர் இறந்தபோது என்ன நடந்தது என தெரியாமல் உட்கார்ந்திருந்தேன் என அவர் சோகமாக கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

    முன்னதாக அறிமுக நிகழ்ச்சியில் பேசிய பாவ்னி, திருமணம் செய்து கொண்டு கணவர், குழந்தைகள் என மகிழ்ச்சியாக வாழ நினைத்தேன். ஆனால் அது எனக்கு கிடைக்கவில்லை என கூறியிருந்தார். பிரதீப் என்ற தெலுங்கு சீரியல் நடிகருடன் பாவனிக்கு திருமணம் நடந்த நிலையில் திருமணமான 8 மாதத்தில் பிரதீப் தனது வீட்டில் தற்கொலை செய்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: