• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 'யாஷிகாவோட முன்னாள் காதலனா இருக்க பெருமைப்படுறேன்’ - பிக் பாஸ் நிரூப்

'யாஷிகாவோட முன்னாள் காதலனா இருக்க பெருமைப்படுறேன்’ - பிக் பாஸ் நிரூப்

நிரூப்

நிரூப்

உண்மையிலேயே அவளோட முன்னாள் காதலனா இருக்குறத நினைச்சு பெருமைப்படுறேன். அவ தான் என் வாழ்க்கையை மாத்துனா

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர்.

    இந்த வாரம் முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் நடைப்பெறவிருப்பதால், வீட்டை விட்டு யார் முதலில் வெளியேறுவார்கள் என்பதை தெரிந்துக் கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.



    அதில் ‘ஒரு கத சொல்லட்டுமா சார்’ டாஸ்க்கில் தனது கதையை சொல்கிறார் நிரூப். அப்போது, “நான் பிக் பாஸுக்கு வர்றேன்னு சொன்னதும், எல்லாரும் யாஷிகாவோட முன்னாள் காதலர்ன்னு சொன்னாங்க. உண்மையிலேயே அவளோட முன்னாள் காதலனா இருக்குறத நினைச்சு பெருமைப்படுறேன். அவ தான் என் வாழ்க்கையை மாத்துனா, எனக்கு திரைத்துறைல எந்தவொரு தொடர்பும் கிடையாது, அத அவ தான் ஏற்படுத்தி கொடுத்தா. ஏன் ஒரு பொண்ணு ஒருத்தனோட வாழ்க்கையை மாத்த கூடாதா?” என்று கேட்க, பிரியங்கா உள்ளிட்ட மற்ற ஹவுஸ்மேட்ஸ் கை தட்டுகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: