• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’நாங்க மாறியாச்சு, இனி மாற வேண்டியது நீங்க தான்’ - பிக் பாஸ் நமீதா கண்ணீர்

’நாங்க மாறியாச்சு, இனி மாற வேண்டியது நீங்க தான்’ - பிக் பாஸ் நமீதா கண்ணீர்

நமீதா மாரிமுத்து

நமீதா மாரிமுத்து

மத்தவங்கக்கிட்ட எந்தவொரு குறை இருந்தாலும், அத ஏத்துக்கிட்டு வாழனும்ன்னு எங்கம்மா சொல்லி சொல்லி வளத்தாங்க. ஆனா அவங்க என்னை ஏத்துக்கல.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.

    விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இதையடுத்து இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. கடந்து வந்த பாதை டாஸ்க்கில் ஒவ்வொருவரும் தங்களது கடினமான தருணங்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று திருநங்கை நமீதா தான் பட்ட கஷ்டங்களை பகிர்ந்துக் கொள்கிறார்.



    அப்போது, “ஒருத்தவங்கக்கிட்ட எந்தவொரு குறை இருந்தாலும், அத ஏத்துக்கிட்டு வாழனும்ன்னு எங்கம்மா சொல்லி சொல்லி வளத்தாங்க. ஆனா அவங்க என்னை ஏத்துக்கல. அடி அடி அடின்னு அடிச்சு மரத்துடுச்சு உடம்பு. இந்த சமூகத்துல திருநங்கைகளை பாலியலுக்காகவும், பிச்சை எடுக்குறதாவும் தான் பாக்குறாங்க. இது எல்லாத்துக்கும் காரணம் பெத்தவங்க மட்டும் தான் வேற யாரும் இல்ல. மாறு மாறுன்னு சொன்ன? நாங்கெல்லாம் எப்போவோ மாறியாச்சு.. இனி மாற வேண்டியது நீங்க தான்” என்று சொல்லிக் கொண்டே அழுகிறார். இதைக்கேட்டும், இமான் அண்ணாச்சி, இசைவாணி உள்ளிட்ட போட்டியாளர்கள் அழுகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: