• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • 'டீன் ஏஜ், காலேஜ் வாழ்க்கையை அனுபவிக்கவில்லை' - நாடியா சங் வருத்தம்!

'டீன் ஏஜ், காலேஜ் வாழ்க்கையை அனுபவிக்கவில்லை' - நாடியா சங் வருத்தம்!

நாடியா சங்

நாடியா சங்

இந்த சீசனில் முதல் லக்ஸுரி டாஸ்காக ‘ஒரு கத சொல்லட்டுமா சார்’ டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது

 • Share this:
  விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், நமீதா வெளியேறியதால் தற்போது இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 17 போட்டியாளர்கள் உள்ளனர்.

  இந்த சீசனில் முதல் லக்ஸுரி டாஸ்காக ’ஒரு கத சொல்லட்டுமா சார்’ டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் தங்களது வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள், வெற்றி குறித்து பேசினார்கள். மேலும் ஒருவர் பேசி முடித்தவுடன் அவர்கள் கூறிய கதைக்கு டிஸ்லைக்ஸ், லைக்ஸ், ஹார்ட் கொடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. நேற்றைய நிகழ்ச்சியில் வருண், அபிஷேக் மற்றும் தாமரை செல்வி ஆகியோர் தங்களது கதை குறித்து பேசினர். இதனை தொடர்ந்து பாவனி, இமான் வெளியில் அமர்ந்து தனியாக பேசி கொண்டிருந்தனர்.

  பாவனியின் கணவர் இறந்தபிறகு வேறு துணையை தேடிக்கொள்ளவில்லையா? என்று அண்ணாச்சி கேட்டதற்கு, வேறொருவர் வந்தார், ஆனால் அந்த உறவு நீடிக்கவில்லை. அவர் எனது கடந்த காலம் குறித்து குத்தி காட்டி கொண்டே இருந்தார், இனி எந்த புது உறவும் தனக்கு தேவையில்லை என்றார். ஆனாலும் அவ்வப்போது தான் தனிமையாக உணர்கிறேன், என்னுடைய சகோதரர்கள் இருவருக்கும் திருணமாகி விட்டது, அவர்களுக்கென ஒரு குடும்பம் உள்ளது. என் பெற்றோர்களுக்கு பின்னர் நான் அனாதையாக இருக்க போவதாக எனக்கு தோன்றுகிறது என கூறினார். அதற்கு, ‘அண்ணன் நான் இருக்கேன்ல’ என்று அண்ணாச்சி அவரை சமாதானப்படுத்தினார்.  இந்த நிலையில் இன்று வெளியான இரண்டாவது ப்ரோமவில் நதியா சங் தனது கதை குறித்து பேசுகிறார். அதில், 'அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு, எனக்கு அம்மா மேல என்னிக்கு ரொம்ப வெறுப்பு வந்துச்சுனா, போலீஸ்காரங்க கிட்ட அடி வாங்க வச்சாங்க. என் லைஃப் முழுக்க வேலை வேலைனு இருந்திருக்கேன். நான் என்னோட டீன் ஏஜ் வயதை அனுபவிச்சதில்லை, காலேஜ் லைஃப் அனுபவிச்சதில்லை. ஆனால் எனக்கு மனுஷங்க கொடுக்காத ரெகக்னிஷன ஒரு ஆப் கொடுத்திச்சு’ என நதியா சங் பேசியுள்ளார்.

  முன்னதாக முதல் ப்ரோமோவில் பேசிய நிரூப், “நான் பிக் பாஸுக்கு வர்றேன்னு சொன்னதும், எல்லாரும் யாஷிகாவோட முன்னாள் காதலர்ன்னு எல்லாரும் சொன்னாங்க. உண்மையிலேயே அவளோட முன்னாள் காதலனா இருக்குறத நினைச்சு பெருமைப்படுறேன். அவ தான் என் வாழ்க்கையை மாத்துனா, எனக்கு திரைத்துறைல எந்தவொரு தொடர்பும் கிடையாது, அத அவ தான் ஏற்படுத்தி கொடுத்தா. பசங்க பெண்களோட வெற்றிக்கு காரணமாக இருக்கும்போது, ஏன் ஒரு பொண்ணு ஒரு பையனோட வாழ்க்கையை மாத்த கூடாதா?” என்று கேட்கும் காட்சிகள் உள்ளது. இதனை கேட்கும் ஹவுஸ் மேட்ஸ் கைதட்டுகின்றனர்.

  ‘ஒரு கத சொல்லட்டுமா சார்’ டாஸ்க் இன்றுடன் முடிவடைய இருக்கிறது. இதில் ஒவ்வொருத்தருக்கும் பாய்ண்ஸ்டுகள் வழங்கப்பட்டுள்ளதால் இந்த டாஸ்கில் யார் அதிகமாக பெற்றிருக்கிறார்கள் என்பது குறித்த விவரம் இன்றைய நிகழ்ச்சியில் தெரிய வரும். இதனிடையே இந்த வாரம் முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் நடைப்பெற இருக்கிறது. 17 போட்டியாளர்களில் வீட்டின் தலைவரான தாமரை செல்வி, பாவ்னியை தவிர மீதமுள்ள 15 போட்டியாளர்களும் உள்ளதால் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Shalini C
  First published: