• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மதுமிதாவுக்கு பாட்டு பாட கற்று கொடுக்கும் ராஜு - கலகலப்பான பிக் பாஸ் ப்ரோமோ!

மதுமிதாவுக்கு பாட்டு பாட கற்று கொடுக்கும் ராஜு - கலகலப்பான பிக் பாஸ் ப்ரோமோ!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

முன்னதாக இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ‘ஒரு கத சொல்லட்டுமா சார்’ டாஸ்க்கில் இன்று நிரூப் பேசுவது தெரிகிறது

  • Share this:
    விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், நமீதா வெளியேறியதால் தற்போது இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 17 போட்டியாளர்கள் உள்ளனர்.

    இந்தநிலையில் இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில், ராஜு, இமான், மதுமிதா, ஐக்கி, சிபி ஆகியோர் ஒன்றாக அமர்ந்து வெளியில் பேசி கொண்டிருக்கின்றனர். அப்போது ராஜு மற்றும் இமான், மதுமிதாவுக்கு பாடல் கற்று கொடுக்கின்றனர். சிவகார்த்திகேயனின் "கட்டிக்கிடும் முன்னே நம்ம" பாடலை ராஜு பாட அதனை கேட்டு மதுமிதாவுக்கு அழகான கொஞ்சும் தமிழில் பாடுகிறார். ஜெர்மனியில் இருந்து வந்திருக்கும் மதுமிதா தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவராவார்.

    எனினும் அவரால் சரளமாக தமிழ் பேச முடிகிறது. ஆனால் அவரது பேச்சு சற்று வித்தியாசமாகவும், பார்க்க அழகாகவும் இருப்பதால் பலரது பாராட்டுகளை பெற்று வருகிறார். குறிப்பாக கடந்த வாரம் கமல்ஹாசன் கூட அவரை பாராட்டியது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் சீசன் 5ஐ பொறுத்தவரை பிரியங்கா, இமான் மற்றும் ராஜு ஆகியோர் நிகழ்ச்சியை கலகலப்பாக்கி வருகின்றனர்.

    முன்னதாக இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ‘ஒரு கத சொல்லட்டுமா சார்’ டாஸ்க்கில் இன்று நிரூப் பேசுவது தெரிகிறது. அதில் “நான் பிக் பாஸுக்கு வர்றேன்னு சொன்னதும், எல்லாரும் யாஷிகாவோட முன்னாள் காதலர்ன்னு எல்லாரும் சொன்னாங்க. உண்மையிலேயே அவளோட முன்னாள் காதலனா இருக்குறத நினைச்சு பெருமைப்படுறேன். அவ தான் என் வாழ்க்கையை மாத்துனா, எனக்கு திரைத்துறைல எந்தவொரு தொடர்பும் கிடையாது, அத அவ தான் ஏற்படுத்தி கொடுத்தா. பசங்க பெண்களோட வெற்றிக்கு காரணமாக இருக்கும்போது, ஏன் ஒரு பொண்ணு ஒரு பையனோட வாழ்க்கையை மாத்த கூடாதா?” என்று கேட்கும் காட்சிகள் உள்ளது. இதனை கேட்கும் ஹவுஸ் மேட்ஸ் கைதட்டுகின்றனர். இரண்டாவது ப்ரோமோவில் நதியா பேசும் காட்சிகள் இருந்தது.



    இன்றுடன் ‘ஒரு கத சொல்லட்டுமா சார்’ டாஸ்க் முடிவடைய இருக்கிறது. இதில் ஒவ்வொருத்தருக்கும் பாய்ண்டுகள் வழங்கப்பட்டுள்ளதால், இந்த டாஸ்கில் யார் அதிகமாக பெற்றிருக்கிறார்கள் என்பது குறித்த விவரம் இன்றைய நிகழ்ச்சியில் தெரிய வரும். இதனிடையே இந்த வாரம் முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் நடைப்பெற இருக்கிறது. 17 போட்டியாளர்களில் வீட்டின் தலைவரான தாமரை செல்வி, பாவ்னியை தவிர மீதமுள்ள 15 போட்டியாளர்களும் உள்ளதால் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: