• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 'அதுக்கு மேல பேசுனா ஃபீல் ஆகிடுவேன்’ - உருக்கமான அபிஷேக்!

'அதுக்கு மேல பேசுனா ஃபீல் ஆகிடுவேன்’ - உருக்கமான அபிஷேக்!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

    ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் நமீதா, பிக் பாஸை விட்டு வெளியேறியதாக நேற்றைய நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. ஆக தற்போது 17 போட்டியாளர்கள் பிக் பாஸில் இருக்கிறார்கள்.

    இந்நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் வீட்டிலுள்ளவர்களுடன் கமல் உரையாடுகிறார். அப்போது, ‘இந்த வீட்லயே எனக்கு பிரியங்கா தான் ரொம்ப க்ளோஸ்’ என்றவாறு உணர்ச்சி வசப்பட்டு அழுகிறார் அபிஷேக். தொடர்ந்து பேசிய அவர், ‘என்ன எங்க அக்கா தான் வளத்தா. அவளுக்கு கல்யாணம் ஆகி போனதும் அதை என்னால ஏத்துக்கவே முடியல’ என்கிறார்.



    இதையடுத்து அபிஷேக்கை கட்டியணைத்து சமாதானப்படுத்தும் பிரியங்கா, ‘எனக்கு ஒரு சசின் ஃபீல் வருது சார்’ என்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: