• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிரியங்கா கொளுத்திப் போடுகிறார் - கமலிடம் கம்ப்ளைண்ட் செய்த ஐக்கி பெர்ரி

பிரியங்கா கொளுத்திப் போடுகிறார் - கமலிடம் கம்ப்ளைண்ட் செய்த ஐக்கி பெர்ரி

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

போட்டியாளர்கள் யாரெல்லாம் வெற்றிபெறும் வியூகத்துடன் இருக்கிறார்கள் எனக் கேள்வி எழுப்புகிறார் கமல்.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர்.

    கடந்த வாரம் நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரம் என்பதால் எலிமினேஷன் இல்லை. ஆனால் இனி ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். அந்த வகையில் இன்று முதல் எலிமினேஷன் நடைப்பெறவிருக்கிறது.



    இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், போட்டியாளர்கள் யாரெல்லாம் வெற்றிபெறும் வியூகத்துடன் இருக்கிறார்கள் எனக் கேள்வி எழுப்புகிறார் கமல். அதற்கு ஐக்கி பெர்ரியும், பாவனியும் அபிஷேக்கை குறிப்பிடுகிறார்கள். அதோடு பிரியங்கா வியூகத்துடன் இருப்பது போல் தெரியவில்லை என்றும், ஆனால் அவ்வப்போது கொளுத்திப் போடுவது போல் தெரிகிறது எனவும் கூறுகிறார் ஐக்கி.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: