• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Promo: 'சாப்பாடு இல்ல, வாடகை கொடுக்க முடியல...' இசைவாணி உருக்கம்

Bigg Boss Promo: 'சாப்பாடு இல்ல, வாடகை கொடுக்க முடியல...' இசைவாணி உருக்கம்

இசைவாணி

இசைவாணி

"எங்க வீட்ல ஒரு நேரம் தான் சாப்பாடு இருக்கும். அதையும் நான் சாப்பிடணும்ன்னு எங்க வச்சிடுவாரு."

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் நாளின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். கடந்த ஞாயிற்றுக் கிழமை இதன் 5-ம் சீசன் தொடங்கியது. இந்த முறை இந்நிகழ்ச்சியில் 18 பேர் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    அதில் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்க, இசைவாணி தான் பட்ட கஷ்டங்களைப் பற்றி கூறுகிறார். அதில், “அப்பா ஹார்பர்ல வேலை செஞ்சாரு... திடீர்ன்னு வேலை போய்டுச்சு... வாடகை கொடுக்கலைன்னு ஒவ்வொரு வீட்டுக்காரங்களும் எங்கள காலி பண்ண வச்சாங்க. நிறைய ட்ரெஸ் போடணும்ன்னு எனக்கு ஆசை, ஆனா அப்போ போட்டுக்கக் கூட துணி இல்ல. சாப்பாட்டுக்கு அவ்ளோ கஷ்டம்... எங்க வீட்ல ஒரு நேரம் தான் சாப்பாடு இருக்கும். அதையும் நான் சாப்பிடணும்ன்னு எங்க வச்சிடுவாரு. ஸோ, கஷ்டப்படுற எல்லாருக்கும், ஒருநாள் லைஃப் மாறும்” என்று கூறுகிறார்.



    இதைக்கேட்டு மற்ற போட்டியாளர்கள் கண் கலங்குகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: