• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 'நான் நெனச்சதெல்லாம் இங்க நடந்துச்சு’ - எமோஷனலான தாமரைச்செல்வி!

'நான் நெனச்சதெல்லாம் இங்க நடந்துச்சு’ - எமோஷனலான தாமரைச்செல்வி!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

‘இந்த லைக், டிஸ்லைக்லாம் குடுத்து பழகியிருப்பீங்க’ என வீட்டில் இருக்கும் போட்டியாளர்களிடம் கமல் கூறுகிறார்.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் உடல்நிலை சார்ந்த காரணங்களால் நமீதா மாரிமுத்து பிக் பாஸ் போட்டியில் இருந்து விலகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    அதில், ‘இந்த லைக், டிஸ்லைக்லாம் குடுத்து பழகியிருப்பீங்க’ என வீட்டில் இருக்கும் போட்டியாளர்களிடம் கமல் கூறுகிறார். அப்போது பேசும் தாமரைச்செல்வி, ‘இந்த நிகழ்ச்சியை நான் பாத்தது இல்லைங்க சார். குழந்தைல எப்படிலாம் இருக்கணும் சிரிக்கணும், விளையாடணும்ன்னு நெனச்சேனோ அப்படி எல்லாம் இந்த வீட்ல நடந்துச்சு. நான் கொஞ்ச நேரம் கோவமா இருந்தாலும், மனசு சரியில்லாம இருந்தாலும் அண்ணாச்சி கூப்பிட்டு கூப்பிட்டு பேசுவார். அதனால அண்ணாச்சிக்கு கொடுக்கிறேன் என லைக் கொடுக்கிறார்.



    இந்த ப்ரோமோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: