ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

’என்னடா இது சோதனை மேல சோதனையா இருக்கு’ - பிக் பாஸ் இன்றைய ப்ரோமோ!

’என்னடா இது சோதனை மேல சோதனையா இருக்கு’ - பிக் பாஸ் இன்றைய ப்ரோமோ!

இமான் அண்ணாச்சி - சிபி

இமான் அண்ணாச்சி - சிபி

’கஷ்டப்படுறோம், கஷ்டப்படுறோம்ன்னா... கஷ்டப்பட்டா தான நாம ஒரு நிலைக்கே போக முடியும்’ என்கிறார் நமீதா.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ ரணகளமாக வெளியாகியிருக்கிறது.

  சின்னத்திரை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இமான் அண்ணாச்சி, யூடியூபர் அபிஷேக் ராஜா, விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா, சீரியல் நடிகர் ராஜு ஜெயமோகன், நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு, சின்னதம்பி சீரியல் மூலம் பிரபலமான நடிகை பாவனி ரெட்டி, தஞ்சாவூரை சேர்ந்த மருத்துவர் மற்றும் ராப் இசை பாடகி ஐக்கி பெர்ரி மற்றும் மாடல் சுருதி பெரியசாமி உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்துக் கொண்டுள்ளனர்.

  இந்நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில், ’இந்த பிக் பாஸ் டைட்டில நகைச்சுவை பண்ற ஒரு காமெடியன் வின் பண்ணனும்’ என்கிறார் இமான் அண்ணாச்சி. அதற்கு புன்னகைத்தவாறு ராஜு கை தட்டுகிறார். அப்போது திடீரென எழுந்து ‘அதை சொல்லணும்ன்னு அவசியம் இல்லை’ என்கிறார் நாடியா. ’என்னடா இது சோதனை மேல சோதனையா இருக்கு’ என்கிறார் இமான்.

  ’கஷ்டப்படுறோம், கஷ்டப்படுறோம்ன்னா... கஷ்டப்பட்டா தான நாம ஒரு நிலைக்கே போக முடியும்’ என்கிறார் நமீதா. இதற்கிடையே ‘நீங்க பேசும் போது சிரிச்சது தப்பா அண்ணே’ என இமானிடம் நிரூப் கேட்க, ‘தப்பில்லையே’ என்கிறார் இமான். அப்போது ’எனக்கது பிடிக்கல டா.. தைரியமா.. ஏண்டா சிரிக்குற? கம்முனு இருடா’ என்றவாறு ஆக்ரோஷமாக எழுகிறார் சிபி. ’சண்ட ஆரம்பிக்கப்போகுது வீட்ல’ என அனைவரையும் அலெர்ட் செய்கிறார் நமீதா.

  ஸோ, பிக் பாஸ் தனது வேலையை ஆரம்பித்து விட்டார். இனி ரசிகர்களுக்கும், மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் ஜாலியோ ஜாலி தான்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Bigg Boss Tamil 5