• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss 5: ’அடிக்க அடிக்க நான் வந்துட்டு தான் இருப்பேன்' - பிக் பாஸ் அபிஷேக்!

Bigg Boss 5: ’அடிக்க அடிக்க நான் வந்துட்டு தான் இருப்பேன்' - பிக் பாஸ் அபிஷேக்!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், அபிஷேக் தனது கதையை கூறுகிறார்.

  • Share this:
    விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கிய நிலையில் தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த சீசனில் முதல் லக்ஸுரி டாஸ்காக "ஒரு கத சொல்லட்டுமா?" என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதில் ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்கையில் நடந்த கதை பற்றி சொல்ல வேண்டும். மேலும் ஒருவர் பேசி முடித்தவுடன் அவர்கள் கூறிய கதைக்கு டிஸ்லைக்ஸ், லைக்ஸ், ஹார்ட் கொடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி போட்டியாளர்களுக்கு பாய்ண்ட்ஸ்கள் வழங்கப்படுகிறது.

    இதுவரை இசைவாணி, சின்னப்பொண்ணு, இமான், பாவ்னி, ஐக்கி, மதுமிதா, ஸ்ருதி, நமீதா ஆகியோர் தங்களது கதையை கூறியுள்ள நிலையில், நேற்று அக்ஷரா தனது கதையை கூறினார். சிறு வயதிலேயே அப்பாவை இழந்ததால் அம்மா மற்றும் அண்ணன் என்னை மிகவும் பாசமாக பார்த்து கொண்டனர் என்றும் மிஸ் இந்திய அழகி போட்டியில் வெற்றி பெற்றது குறித்தும் பேசினார். மேலும் மிகவும் செல்லமாக வளர்ந்ததால் பிக் பாஸ் வீட்டில் யாராவது என்னை பற்றி பேசினால் அழுதுவிடுகிறேன் என்றும் வருத்தமாக பேசினார்.

    இதனை தொடர்ந்து பேசிய சிபி, நான் என்ன செய்தாலும் என் பெற்றோர்கள் எனக்கு ஆறுதலாக இருப்பார்கள் என்றார். மேலும் தனது பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கை குறித்து பேசிய சிபி, சினிமா துறையில் எப்படி வளர்ந்தார் என்றும் பேசினார். குறிப்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு நன்றி கூறினார். மேலும் எல்லோரும் நம்பியதால் தான் நான் எந்த இடத்தில் இருக்கிறேன். அதனால் தயவு செய்து யாராக இருந்தாலும் நம்புங்கள். நீங்கள் நம்பினால் தான் அவர்கள் முழு திறமையை காட்ட முடியும் என்று தனது கதையை நிறைவு செய்தார்.

    இதன் பின்னர் பேசிய பிரியங்கா, எனக்கு 11 வயது இருக்கும், அப்பா டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த போது மூச்சு திணறலால் உயிரிழந்தார். அப்போது என்னுடைய அம்மா தான் தனியாக அப்பாவை கையால் தூக்கி ஸ்ட்ரெச்சரில் வைத்து ஹாஸ்பிடல் கொண்டு சென்றிருக்கிறார். எனவே யாராவது கஷ்டத்தில் இருந்தால் சென்று உதவுங்கள் என கோரிக்கை விடுத்தார். மேலும் இறுதியாக தனது வாழ்க்கையில் எந்த குறிக்கோளும் இல்லை என கூறியதால் அவருக்கு ராஜு, ஐக்கி, அபிஷேக், நிரூப் ஆகியோர் டிஸ்லைக் போட்டனர். மீடியாவில் பெரிய ஆளாக இருக்கும் நீங்களே உங்களுக்கு குறிக்கோள் இல்லை என்று சொல்வது தவறு என அவர்கள் தெரிவித்தனர், இதனால் பிரியங்கா சமையல் அறையில் இருந்து அழுது கொண்டிருந்தார். அவரை இமான் சமாதானப்படுத்தினார்.

    இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், அபிஷேக் தனது கதையை கூறுகிறார். அவரது அப்பாவின் சொத்துக்கள் கைவிட்டு போனது குறித்தும், இரண்டு வருடங்களில் அதனை அபிஷேக் மீட்டதாகவும் பேசுகிறார். அடிக்க அடிக்க நான் வந்து கொண்டுதான் இருப்பேன், இது தான் நான் என்றும் கூறுகிறார். இது குறித்து ராஜு, இமானிடம் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்.



    முன்னதாக இன்று வெளியான முதல் ப்ரோமோவில், தாமரை செல்வி தனது கதையை கூறுகிறார். அதில் தனது மகனை பார்த்து நான்கு மாதங்கள் ஆவதாகவும், எனது மகனிற்கு நான் பட்ட கஷ்டங்கள் தெரிய வேண்டும், அவனை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தான் இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்தேன் என அழுது கொண்டே கூறுகிறார். இவர்களை தவிர அபினய் வாடி, நதியா சங், வருண், நிரூப் ஆகியோர் இன்னும் தங்களது கதையை கூறவில்லை என்பதால் அவர்களும் இன்று பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: