• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • Bigg Boss Promo: மகனை பிரிந்த ஏக்கம் - கதறி அழும் தாமரைக்கு ஆறுதலாக பாவனி!

Bigg Boss Promo: மகனை பிரிந்த ஏக்கம் - கதறி அழும் தாமரைக்கு ஆறுதலாக பாவனி!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், அபிஷேக் தனது கதையை கூறுகிறார்

 • Share this:
  விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி தற்போது இரண்டு வாரம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், அதில் நமீதா வெளியேறியதால் தற்போது 17 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். நேற்று நடைபெற்ற தலைவரை தேர்ந்தெடுக்கும் பலூன் டாஸ்கில் தாமரை செல்வி வெற்றி பெற்று பிக் பாஸ் சீசன் 5-ன் முதல் தலைவராக உள்ளார்.

  இந்த டாஸ்க் வாரம் ஒருமுறை நடத்தப்படும். வீட்டின் தலைவரை யாரும் நாமினேட் செய்ய முடியாது என்பதால் இந்த பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் வீட்டின் தலைவரான தாமரை செல்வி மற்றும் நடிகை பாவ்னியை தவிர மீதம் இருக்கும் 15 போட்டியாளர்களும் உள்ளனர். இதில் குறைந்த வாக்குகள் பெற்ற நபர் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்.

  இதனிடையே இந்த சீசனில் முதல் லக்ஸுரி டாஸ்காக "ஒரு கத சொல்லட்டுமா?" என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்கையில் நடந்த கதை பற்றி சொல்ல வேண்டும். மேலும் ஒருவர் பேசி முடித்தவுடன் அவர்கள் கூறிய கதைக்கு டிஸ்லைக்ஸ், லைக்ஸ், ஹார்ட் கொடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி போட்டியாளர்களுக்கு பாய்ண்ட்ஸ்கள் வழங்கப்படுகிறது.

  இதுவரை இசைவாணி, சின்னப்பொண்ணு, இமான், பாவ்னி, ஐக்கி, மதுமிதா, ஸ்ருதி, நமீதா, அக்ஷரா, பிரியங்கா, சிபி ஆகியோர் தங்களது கதையை கூறியுள்ளனர். இந்த நிலையில், தாமரை செல்வி மற்றும் அபிஷேக் தங்களது கதையை இன்று கூற இருப்பது இன்று வெளியான முதல் இரண்டுப்ரோமோக்களில் உறுதியாகியுள்ளது. முதல் ப்ரோமோவில், தாமரை தனது கதை குறித்து பேசிய காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

  அதில், அதில் தனது மகனை பார்த்து நான்கு மாதங்கள் ஆவதாகவும், என் மீது தப்பு இருப்பதாக நினைத்து அவர் என்னுடன்வரவில்லை. எனது மகனிற்கு நான் பட்ட கஷ்டங்கள் தெரிய வேண்டும், அவனை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தான் இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்தேன் என அழுது கொண்டே கூறினார். இதனை கேட்டு பிரியங்கா, அக்ஷரா உள்ளிட்ட ஹவுஸ் மேட்ஸ் அழும் காட்சிகள் இருந்தது.

  இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், வெளியில் அமர்ந்து தாமரை, பாவ்னி மற்றும் ஐக்கி ஆகியோர் ஒன்றாக அமர்ந்து பேசி கொண்டிருகின்றனர். அப்போது அங்கு வரும், அபிஷேக் நீங்கள் இந்த ஷோவிற்கு வந்ததால் உங்கள் கதையை அனைவரும் தெரிந்து கொள்வர், உனது மகன் விரைவில் உன்னிடம் வருவான். ஒரு தாயின் குமுறல் இது, உன் பேச்சு பலரிடம் சென்றுள்ளது, உனக்கு இப்படி செய்தவர்களுக்கு தான் பாவம் சேர்ந்துள்ளது என்கிறார். இதனை கேட்டு தாமரை கதறி அழுக அவரை பாவ்னி சமாதானப்படுத்தும் காட்சிகள் அடங்கியுள்ளது. இதனால் இன்றைய நிகழ்ச்சி மீதான எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.  பிக் பாஸ் வீட்டில் மிகவும் வெகுளித்தனமான போட்டியாளர் என்றால் அது தாமரை செல்வி என்றே கூறலாம். அந்த அளவுக்கு மிகவும் வெகுளியாக இருப்பதால் சில நேரங்களில் பேச தெரியாமல் பேசி பிரச்சனைகளிலும் சிக்கி வருகிறார். வந்த முதல் வாரத்திலேயே நமீதா குறித்து எதார்த்தமாக சில கருத்துக்களை தெரிவிக்க அது பிரச்சனையானது. அதனால் தான் நமீதா வெளியேறினால் என்ற தகவலும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இதனிடையே தாமரைக்கு எண்ணற்ற ரசிகர்கள் இருப்பதால் அவரது கதையை கேட்க பெரும்பாலனோர் ஆர்வமாக உள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Shalini C
  First published: