முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'அவங்க ஒரு வனிதா விஜயகுமார் மாதிரி...’ யாரை சொல்கிறார் பிக் பாஸ் அபிஷேக்?

'அவங்க ஒரு வனிதா விஜயகுமார் மாதிரி...’ யாரை சொல்கிறார் பிக் பாஸ் அபிஷேக்?

பிக் பாஸ்

பிக் பாஸ்

இந்த வாரத்திலிருந்து பிக் பாஸ் வீட்டில் எலிமினேஷன் நடைப்பெறவிருக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இதில் தனிப்பட்ட காரணங்களால் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நமீதா மாரிமுத்து விலகினார். இதனால் தற்போது பிக் பாஸ் வீட்டில் 17 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இந்த வாரத்திலிருந்து பிக் பாஸ் வீட்டில் எலிமினேஷன் நடைப்பெறவிருக்கிறது. இதையடுத்து பிக் பாஸ் தமிழ் 5 போட்டியிலிருந்து வெளியேறும் முதல் நபர் யாரென்று தெரிந்துக் கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில், அபிஷேக் பெண்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் கருத்து தெரிவித்து வருகிறார். அப்போது, “நாடியா சங் ஒரு வனிதா விஜயகுமார் மாதிரி ரொம்ப ட்ரான்ஸ்பரெண்டா இருக்கப் போறாங்க. ஐக்கி பெர்ரி கூட பெருசா யாராலயும் கனெக்டாக முடியாது. அவள ஒரு வினோத பிறவியா தான் பாக்க முடியுமே ஒழிய, டக்குன்னு அவ கூட கனெக்டாக முடியாது. பாவனி ஏன் நாமினேஷன்ல வரலன்னா, அவளோட கதை பெரிய பாதிப்பை உண்டாக்கியிருக்கு. மக்களின் பார்வையில் இசை எப்படின்னா, இந்தப் பொண்ணுக்குள்ள சோகம் இருக்கு, ஆனா அதை அடிக்கடி எடுத்து சொல்லுதோன்னு தோணும்” என்கிறார்.

கடைசியில் கை குடுடா... கை குடுடா... என அபிஷேக்கிடம் ஹை-பை போடுகிறார் அண்ணாச்சி

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bigg Boss Tamil 5