• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நெருப்பு நிரூப், இம்சை இசை - ஹவுஸ் மேட்ஸுக்கு பட்டப்பெயர் வைக்கும் அபிஷேக்

நெருப்பு நிரூப், இம்சை இசை - ஹவுஸ் மேட்ஸுக்கு பட்டப்பெயர் வைக்கும் அபிஷேக்

அபிஷேக்

அபிஷேக்

முன்னதாக இன்று வெளியான முதல் ப்ரோமோவில், நாடியா இந்த சீசன் வனிதா என அபிஷேக் விமர்சிக்கிறார்

  • Share this:
    விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், நமீதா வெளியேறியதால் தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர். வெற்றிகரமாக முதல் வாரத்தை கடந்துள்ள நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் வீட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் பலூன் டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் வெற்றி பெற்று தாமரை செல்வி வீட்டின் முதல் தலைவராகியுள்ளார். இதனை தொடர்ந்து இந்த சீசனின் முதல் நாமினேஷன் தொடங்கியது.

    அதன்படி இசைவாணி, ராஜு, மதுமிதா, அபிஷேக் ராஜா, பிரியங்கா, அபினய் , சின்ன பொண்ணு, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, சிபி சந்திரன், நிரூப் ஆகிய 15 பேர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் 15 பேரில் குறைந்த வாக்குகள் பெறுபவர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார் என்பதால் யார் வெளியேறுவார்? என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.



    இந்தநிலையில் இன்று வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், அபிஷேக் ஹவுஸ் மேட்ஸ் அனைவரின் பெயர்களுக்கு ஒரு அடைமொழி கூறுகிறார். அப்போது அனாமத்து அண்ணாச்சி, நெருப்பு நிரூப், பாவம் பாவ்னி, தலைவி தாமரை, வைவால் வருண் என்கிறார். இறுதியாக இம்சை இசை என்கிறார். இதனை கேட்டு கிச்சனில் இருக்கும் இசைவாணி கோவமாக என்னை பார்த்தல் எப்படி இருக்கிறது? என்ன பிரச்னை உனக்கு? என கேட்டு கொண்டே வருகிறார். அதற்கு அபிஷேக் என்ன கொத்தமல்லி மண்டை என கூறி கலாய்க்கிறார். இதனால் இசைவாணி மற்றும் அபிஷேக் இடையே மோதல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக இன்று வெளியான முதல் ப்ரோமோவில், நாடியா இந்த சீசன் வனிதா என அபிஷேக் விமர்சிக்கிறார். மேலும் ஐக்கியை எல்லோரும் வினோத பிறவியாக பார்க்க வாய்ப்பு இருக்கிறதே தவிர டக்குனு அவளுடன் அட்டாச் ஆக முடியாது, பாவ்னி ஏன் நாமினேஷனில் வரவில்லை என்றால் அவருடைய கதை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இசைவாணியின் வாழ்க்கையில் சோகம் இருக்கு, ஆனால் அதை அடிக்கடி சொல்லி காட்டுகிறார் என கூறும் காட்சிகள் இருந்தது.

    அபிஷேக் பிக் பாஸ் ஆரம்பித்த நாள் முதல் சக ஹவுஸ் மேட்ஸ் குறித்து விமர்சனம் செய்து வருகிறார், அவர்கள் முகத்தை பார்த்து குணத்தை சொல்வது என தினமும் ஏதாவது ஒன்றை கூறி கொண்டிருக்கிறார். இதனால் அபிஷேக் ஜோசியம் பார்ப்பது போல பேசுவதாக பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் அவர் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ளதால் இந்த வாரம் வெளியேறுவாரா? என்ற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: