• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக் பாஸ் வீட்டில் காணாமல் போனவர் யார்? - லேட்டஸ்ட் ப்ரோமோ!

பிக் பாஸ் வீட்டில் காணாமல் போனவர் யார்? - லேட்டஸ்ட் ப்ரோமோ!

கமல்

கமல்

'நிறைய பேர் காணாம போயிருக்காங்க, ஆனா அவங்கள எல்லாம் இவங்களுக்கு தெரில, என்ன மட்டும் தெரிஞ்சிருக்குன்னா, என்ன நோட் பண்ணிருக்காங்க, ஸோ நான் காணாம போகல’ என்கிறார் நாடியா.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர்.

    கடந்த வாரம் நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரம் என்பதால் எலிமினேஷன் இல்லை. ஆனால் இனி ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். அந்த வகையில் இன்று முதல் எலிமினேஷன் நடைப்பெறவிருக்கிறது.

    இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், ’ஜொலித்தவர் யார்? மிளிர்ந்தவர் யார்? காணாமல் போனவர் யார்ன்னு 2 வகையா பிரிக்கச் சொல்லிருக்காங்க’ என கமல் கூற, ‘ஜொலித்தவர் லிஸ்ட்ல இமான் அண்ணாச்சி தான். காணாமல் போனவர்னா அது சின்னப்பொண்ணு அம்மாவும், நாடியா சங்கும் தான்’ என்கிறார் அபிஷேக்.

    மனோரமாவிடம் பாராட்டு வாங்கிய ’மெட்டி ஒலி’ விஜி உமா மகேஸ்வரி



    'நிறைய பேர் காணாம போயிருக்காங்க, ஆனா அவங்கள எல்லாம் இவங்களுக்கு தெரில, என்ன மட்டும் தெரிஞ்சிருக்குன்னா, என்ன நோட் பண்ணிருக்காங்க, ஸோ நான் காணாம போகல’ என்கிறார் நாடியா. மறுபக்கம் கதறியழுகிறார் சின்னப்பொண்ணு. பின்னர் ’சத்தியமா மக்கள் மத்தியிலும், இவங்க முன்னாடியும் நான் காணாம போகவே மாட்டேன் சார்’ என கமலிடம் கூறுகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: