• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • இமான் அண்ணாச்சியிடம் அத்துமீறும் அபிஷேக் - எச்சரிக்கும் பிரியங்கா!

இமான் அண்ணாச்சியிடம் அத்துமீறும் அபிஷேக் - எச்சரிக்கும் பிரியங்கா!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

Bigg Boss Tamil 5 Promo: பிக் பாஸில் நேர்மையான போட்டியாளராக இமான் அண்ணாச்சி இருப்பதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 • Share this:
  விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், நமீதா வெளியேறியதால் 17 போட்டியாளர்கள் இருந்தனர். இதில் கடந்த வாரம் 15 நபர்கள் நாமினேட் ஆகியிருந்த நிலையில் அதில் நாடியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார். இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை என்பதால் நாமினேஷன் நடைபெறும் என்பதால் இந்த வாரம் யாரெல்லாம் லிஸ்டில் வருவார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

  இந்த வாரம் பெரும்பாலானோர் பாவ்னி மற்றும் சின்ன பொண்ணுவை நாமினேட் செய்வது இன்று வெளியான முதல் ப்ரோமோவில் உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில், வீட்டின் இரண்டாவது தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் நடைபெறுகிறது. "என்ன பீலிங்" என்ற பெயரில் தொடங்கும் டாஸ்கில் ஒருவரின் உணர்வுகளை தூண்ட வேண்டும் என கூறப்படுவது தெரிகிறது. இந்த டாஸ்கில் அபிஷேக் மற்றும் நிரூப் ஆகியோர் பெண்கள் உடையை அணிந்துள்ளனர். முதலில் ராஜூவை அனைவரும் சிரிக்க வைக்க முயற்சி செய்கின்றனர்.

  பின்னர் இசையை சீண்டும் அபிஷேக், சின்னவயதில் இருந்து நீ கஷ்டப்பட்டது எல்லாம் போதாதா? அப்படி கஷ்டப்பட்டு இந்த டாஸ்கில் நீ வெற்றி பெற வேண்டுமா? ஒரு சட்டை வாங்க கூட எப்படியெல்லாம் கஷ்டப்பட்டாய் என பேசுகிறார்.
  இதனால் ஆத்திரமடைந்த இமான், டாஸ்கில் இப்படியெல்லாம் பேச கூடாது, சிரிக்க மட்டும் வையுங்கள் என்கிறார். அதற்கு வருண், நாங்கள் யாரையும் புண்படுத்தவில்லை, அவர் கதையை கூறினால் எமோஷனல் அவர் என்பதால் இப்படி சொல்கிறோம் என்கிறார். இந்த பிரச்னை பெரிதாவது தற்போது வெளியாகியுள்ளது மூன்றாவது ப்ரோமோவில் உறுதியாகியுள்ளது.

  முதலில் என்ன செய்தாலும் ஏதாவது ஒன்று சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள் அண்ணா, என வருண் கூறுகிறார். அதற்கு இமான், சிரிக்க வைக்க மட்டும் முயற்சி செய்யுங்கள் தம்பி என்கிறார். இதனை ஏற்றுக்கொள்ளாத வருண் சிரிக்க மட்டும் அல்ல, கோபப்படுத்தலாம், அழ வைக்கலாம், வெறுப்பேத்தலாம் என்கிறார். இதனால் இமான் அங்கிருந்து கோபமாக செல்லும் நேரத்தில் குறுக்கிடும் அபிஷேக், ஒட்டுமொத்த டாஸ்க்கையும் சொதப்பிவிட்டீர்கள், இனிமேல் என்ன செய்வது என்கிறார். மேலும் நீங்க தான் குரூப் சேர்க்கிறீர்கள், உங்களுக்கு ராஜு முக்கியம், நான் முக்கியம் இல்லை என்றால் இருக்கட்டும். கதவை திறந்தால் நான் இப்போதே வெளியே செல்ல தயாராக இருக்கிறேன். நான் வெளியே சென்றாலும் ஏதோ செய்துகொள்ள வலு இருக்கிறது என்கிறார்.

  அதற்கு பிரியங்கா இதெல்லாம், நீ பேசக்கூடாது அபிஷேக், இது ரொம்ப ஓவராக இருக்கிறது என்கிறார். அதற்கு அபிஷேக் நான் அப்படி தான் பேசுவேன் என சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தது முதல் மற்றவர்கள் கவனத்தை பெற அபிஷேக் ஏதாவது ஒன்றை பேசி கொண்டும், ஸ்டேட்டர்ஜி பயன்படுத்தி மற்றவர்களை மூளை சலவை செய்தும் வருகிறார். இதனால் சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஹெட்டர்ஸ்கள் அதிகரித்து வருகிறது.   
  View this post on Instagram

   

  A post shared by Vijay Music (@vijaymusicoffl)


  இதனிடையே அன்சீன் கட்சியாக வெளியான வீடியோ ஒன்றில், சிபி, பாவ்னி, ராஜு, இசைவாணி ஆகிய நான்கு பேர் இருக்கின்றனர். தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்கில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தேர்வு நடைபெறுவதாக தெரிகிறது. அதில் அபிஷேக் பாவ்னி இந்த வாரம் முழுவதும் சமையல் வேலை பார்த்துள்ளார், ராஜுக்கு தலைவராவது ஒரு விஷயமே இல்லை என்றும் சிபி தலைவரானால் நன்றாக இருக்கும் என்றும் அனைவர் மத்தியில் கூறுகிறார். அதற்கு ப்ரியங்கா, இது உங்கள் கருத்து என்பதை தெளிவாக கூறு அபிஷேக், ஸ்டேட்டர்ஜி பயன்படுத்தாதே என கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

  இதன்மூலம் ராஜு மீது அபிஷேக்கிற்கு உள்ள பொறாமை கண்கூடாக தெரிவதாக பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். மேலும் மூன்றாவது ப்ரோமோவில் ராஜு, சிபி, பாவ்னி மற்றும் இசை மட்டுமே நிற்பதால் இவர்களில் ஒருவர் தான் இந்த வார தலைவராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வார தலைவர் யார்? நாமினேஷன் லிஸ்டில் இருப்பவர்கள் யார் என்ற விவரம் இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Shalini C
  First published: