• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: இரண்டாக பிரிந்த பிக் பாஸ் வீடு - தண்டனை பெற்ற மது, பாவனி!

Bigg Boss Tamil 5: இரண்டாக பிரிந்த பிக் பாஸ் வீடு - தண்டனை பெற்ற மது, பாவனி!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

பாவனி, ஸ்ருதி, இமான் அண்ணாச்சி, பிரியங்கா, இசைவாணி, சிபி, வருண் ஆகியோர் பிக் பாஸ் நகரத்தினர் அணி.

  • Share this:
    விஜய் டிவி-யில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது மூன்று வாரங்களை கடந்துள்ளது. இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நிலையில் முதல் எலிமினேஷனாக நாடியா வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து கடந்த வாரம் அபிஷேக் வெளியேற்றப்பட்டார். இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் பாவ்னி, அபினய், பிரியங்கா, அக்ஷரா, வருண், ஸ்ருதி, இசைவாணி, இமான் மற்றும் சின்னப்பொண்ணு ஆகியோர் உள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று, பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு இந்த வாரத்திற்கான லக்ஸூரி டாஸ்க் அறிவிக்கப்பட்டது. இதில் கடந்த சீசனில் வழங்கப்பட்ட நகரம் கிராமம் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. 'ஊரு விட்டு ஊரு வந்து' என்கிற டாஸ்க்கிற்கு ஏற்ற வகையில் கார்டன் ஏரியாவில் செட்டப்கள் போடப்பட்டிருந்தன. நகரத்திற்கு தலைவர் நிரூப், கிராமத்திற்கு தலைவர் அக்ஷரா என பிக் பாஸ் அறிவித்தார் .

    இவர்கள் இருவரும் ஒவ்வொருவராக தங்கள் அணியை தேர்ந்தெடுத்த நிலையில், பாவனி, ஸ்ருதி, இமான் அண்ணாச்சி, பிரியங்கா, இசைவாணி, சிபி, வருண் ஆகியோர் நகரத்தினர் அணியாகவும், சின்னப்பொண்ணு, தாமரை, மது, ஐக்கி, ராஜு, அபினய் ஆகியோர் கிராமத்து அணியாகவும் பிரிந்தனர். இதற்கென்று உடை தனித்தனியாக இரண்டு அணியினருக்கும் வழங்கப்பட்டது.

    மேலும் உணவும் கூட இரண்டு அணிக்கும் கிராமம் மற்றும் நகர வாழ்க்கைக்கு தகுந்தாற்போல வழங்கப்படும். உணவை கூட யாரும் மற்ற அணியினருடன் உடன் பகிர்ந்து கொள்ள கூடாது என்று பிக் பாஸ் அறிவித்தார். இதில் கிராமத்து அணியில் தாமரை, சின்னபொண்ணுவிற்கு கெட்அப் கட்சிதமாக பொருந்திருந்தது. ஐக்கி மற்றும் அக்ஷரா கிராமத்து பாணியில் சேலை கட்டி இருந்தனர். மேலும் ராஜு, அபினய் தங்கள் கெட்அப்களை மாற்றி அசல் கிராமத்து இளைஞர்கள் போல இருந்தனர். நகரத்து அணியில் இமான் அண்ணாச்சி ஹேர் ஸ்டைல் மாற்றி வித்தியாசமாக இருந்தார்.

    அதன்படி நேற்று தொடங்கிய இந்த டாஸ்க் முடிவுகள் இன்று வெளியாவது இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் தெரிகிறது. அதில், 'ஊரு விட்டு ஊரு வந்து' டாஸ்க்கில் நாள் முழுவதும் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்காத இருவரை தேர்ந்தெடுத்து கூறுமாறு பிக் பாஸ் அறிவிக்கிறார். நகரத்தின் தலைவரான நிரூப், பாவனியையும், கிராமத்தின் தலைவரான அக்ஷரா, மதுவையும் கூறுகின்றனர்.



    இதனை தொடர்ந்து மது மற்றும் பாவனி இருவரும் இன்று இரவு முழுவதும் கார்டன் ஏரியாவில் நெருப்பு மூட்டி அதனை அணையாமல் பார்த்து கொள்ள வேண்டும் என பிக் பாஸ் அறிவிக்கிறார். எனவே பாவனி, மது இருவர் மட்டும் கார்டன் ஏரியாவில் நெருப்பு மூட்டி தூக்கத்துடன் அமர்ந்திருக்கும் காட்சிகள் உள்ளது. இன்றைய நிகழ்ச்சி முழுவதும் இந்த டாஸ்க் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: