முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தொடங்கியது பிக் பாஸ் ரேஸ்... முதலிடத்திற்கு அடித்து கொள்ளும் சிபி - நிரூப்!

தொடங்கியது பிக் பாஸ் ரேஸ்... முதலிடத்திற்கு அடித்து கொள்ளும் சிபி - நிரூப்!

பிக் பாஸ் எவிக்‌ஷன்

பிக் பாஸ் எவிக்‌ஷன்

வெளியாகியுள்ள ப்ரோமோவில் ஃபினாலே ரேஸ் தொடங்கி விட்டது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும், இந்த ரேஸில் தரவரிசை படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என பிக் பாஸ் அறிவிக்கிறார்.

  • Last Updated :

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது வெற்றிகரமாக 71 நாட்களை நிறைவு செய்துள்ளது. வழக்கமாக இந்த நிகழ்ச்சியில் வாரம் முழுவதும் நடந்த பிரச்னைகள் குறித்து சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் நடப்பது வழக்கம்.

அந்தவகையில் கடந்த சனிக்கிழமை டாஸ்கில் தாமரை நாடகம் போடுவதாக பிரியங்கா கூறியதை தனது தொழிலை அவமதிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் கூறியதாக தாமரை எடுத்து கொண்டார். இதுகுறித்து பேசிய கமல், பிரியங்கா தொழிலை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கூறவில்லை என்றார்.

பின்னர் பிரியங்காவின் பக்கம் திரும்பிய கமல், “மத்தவங்களுக்கு இருக்கான்னு பார்த்து சாப்பிடுங்க’ என்று நினைவுப்படுத்துவது நல்ல விஷயம்தான். ஆனால் இதை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது சொல்லாதீர்கள் என அட்வைஸ் செய்தார். இதனை தவறு என பிரியங்காவும் ஏற்றுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து முக்கிய பிரச்சனையான பாவ்னி - அபிநய் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது அவர்களுக்கு இடையே காதல் இருந்தால் கூட உங்களுக்கெல்லாம் என்ன?” என்று கமல் அதிரடியாக கேள்வி எழுப்பினார். அவர்களுக்கு இடையே காதலா.... நட்பா.. சகோரத்துவமா.. இதெல்லாம் இருக்கா இல்லையான்னு கேட்கறதுக்கு கூட உங்களுக்கு உரிமையில்லை. அது அவங்க பர்சனல் என கமல் பேசினார். பின்னர் நாமினேஷன் ஆனவர்களில் சிபி முதலில் காப்பாற்றப்பட்ட்டதாக அறிவித்தார்.

ஞாயிற்று கிழமை நடந்த நிகழ்ச்சியில் மீண்டும் எலிமினேஷன் தொடங்கியது. அதில், முதலில் தாமரை, அக்ஷ்ரா, அபிநய் காப்பாற்றப்பட்டனர். இறுதியாக நிரூப், இமான், அமீர் இருந்த நிலையில் இவர்களில் இருந்து இமான் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். இமான் வெளியேறியபோது சக போட்டியாளர் ராஜு கதறி அழுதார்.

இந்தநிலையில் இன்று வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், பினாலே ரேஸ் தொடங்கி விட்டது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்த ரேஸில் தரவரிசை படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என பிக் பாஸ் அறிவிக்கிறார். பின்னர் ஒன்று முதல் பத்து வரை எண் இருக்கின்ற மேடை அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் என்னை விட சிறந்த போட்டியாளர் இருந்தால் முதல் இடத்தை எடுத்து கொள்ளலாம் என ராஜு கூறுகிறார். அப்போது பிரியங்கா நான் இரண்டாவது இடத்தை எடுத்து கொள்கிறேன் என கூறுகிறார். முதல் எண் எனக்கு பிடிக்கும் என கூறி சிபி அங்கு நின்று கொள்கிறார்.

மேலும் படிக்க - பிக்பாஸ் போட்டியாளர்கள் தங்களது வரம்பை மீறினார்களா? கோபத்தில் கமல்!

இதனை பார்த்து கடுப்பான நிரூப், நீ கேம் ஒழுங்காக விளையாடுவதில்லை என கமல் சாரே கூறுகிறார் என சொல்கிறார். அதற்கு சிபி, எனக்கு தகுதி இருப்பதாக நம்புவதாக கூறுகிறார். மேலும் உன்னை விட தைரியம், தில், கெத்து இருக்கிறது, உனக்கு அதில் எதுவும் இல்லை என்கிறார். இதனை பார்த்து நிரூப் சிரிக்கும் காட்சிகள் உள்ளது. மேலும் ராஜூ மூன்றாவது இடத்திலும், பாவ்னி 6வது இடத்திலும் இருக்கும் காட்சிகள் உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் 5 வாரங்களே இருப்பதால் இனி வரும் நாட்களில் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Bigg Boss Tamil 5