• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 'என்ன பக்கு பக்குன்னு அடிச்சுக்குதா?’ - பிக் பாஸில் இருந்து வெளியேறப்போவது யார்?

'என்ன பக்கு பக்குன்னு அடிச்சுக்குதா?’ - பிக் பாஸில் இருந்து வெளியேறப்போவது யார்?

கமல் ஹாசன்

கமல் ஹாசன்

என்ன பக்கு பக்குன்னு அடிச்சுக்குதா? எனக்கும் அடிச்சுக்குது.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர்.

    கடந்த வாரம் நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரம் என்பதால் எலிமினேஷன் இல்லை. ஆனால் இனி ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். அந்த வகையில் இன்று முதல் எலிமினேஷன் நடைப்பெறவிருக்கிறது.

    இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், நேற்று காப்பாற்றப்பட்டவர்கள் போக மீதமிருக்கும் 5 பேர் நாமினேஷனில் இருக்கிறார்கள். அப்போது பேசும் கமல், “ஐவர்... எஸ்... எஸ்... இதிலிருந்து ஒருவர் வெளியேற வேண்டியிருக்கும். என்ன பக்கு பக்குன்னு அடிச்சுக்குதா? எனக்கும் அடிச்சுக்குது. நெஞ்சோடு அணைத்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் அனுமதியோடு” என எலிமினேஷன் கார்டை எடுக்கிறார்.



    இதையடுத்து இன்று வெளியேறும் போட்டியாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: