• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss - ’நீ புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணி தான்’ - யாரை சொல்கிறார் பிக் பாஸ்?

Bigg Boss - ’நீ புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணி தான்’ - யாரை சொல்கிறார் பிக் பாஸ்?

பிக் பாஸ் ப்ரோமோ 5

பிக் பாஸ் ப்ரோமோ 5

இதில் கடைசியாக வரும் போட்டியாளர் கையில் இருக்கும் பொம்மையில் குறிப்பிட்டிருக்கும் நபர் வெளியேற வேண்டும்

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வார நாமினேஷன் லிஸ்டில் அக்ஷ்ரா, அபினய், இமான், ராஜு, பாவ்னி, மதுமிதா, சிபி ஆகியோர் உள்ளனர். இவர்களில் ராஜுவிற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் இருப்பதால் அவர் முதல் நபராக சேவ் செய்யப்பட்டுவிடுவார், இதனால் இவர்களில் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இந்த வாரத்திற்கான லக்ஸூரி பட்ஜெட் டாஸ்க் வழங்கப்பட்டது. "நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை" என்ற பெயரில் நடந்த இந்த டாஸ்கில், போட்டியாளர்கள் அவர்களுக்காக விளையாடாமல் மற்றவர்கள் வெற்றிக்காக விளையாட வேண்டும் என கூறப்பட்டது. ஒவ்வொரு போட்டியாளர் குறிக்கும் வகையில் ஒவ்வொரு பொம்மை கார்டனில் வைக்கப்பட்டு இருக்கும். மணி அடித்ததும் போட்டியாளர்கள் அவர்களுடைய பொம்மையை விட்டுவிட்டு மற்றவர்கள் யாராவது ஒருவருடைய பொம்மையை தூக்கிக்கொண்டு ஓடிச்சென்று அருகே அமைக்கப்பட்டுள்ள கூடாரத்திற்குள் செல்ல வேண்டும்.

    இதில் கடைசியாக வரும் போட்டியாளர் கையில் இருக்கும் பொம்மையில் குறிப்பிட்டிருக்கும் நபர் வெளியேற வேண்டும் என கூறப்பட்டது. மேலும் போட்டியாளர்கள் மற்றவரின் பொம்மையை எடுக்காமல், தனது பெயர் இருக்கும் பொம்மையை எடுத்தால் அவர் போட்டியில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் கூறப்பட்டது.

    இந்த போட்டியில் பிரியங்கா, சிபி , வருண், அக்ஷ்ரா, ராஜு, மதுமிதா, பாவ்னி, இமான், அபினய், இசை ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர். நேற்றைய நிகழ்ச்சியில் நிரூப், ஐக்கி, தாமரை ஆகியோர் உள்ளனர். இதனிடையே இந்த டாஸ்க் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, இந்த வீட்டில் சுயமாக விளையாடுபவர்கள் யார்? அடுத்தவர்களின் கைப்பாவையாக இருப்பவர் யார்? என ஒவ்வொருவருவராக வந்து கூறும்படி பிக்பாஸ் அறிவித்தார். அதன்படி ஒவ்வொருவராக வந்து பேசினர். இதில் அபினய் - நிரூப் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    https://twitter.com/vijaytelevision/status/1458683449779253254?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1458683449779253254%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fpublish.twitter.com%2F%3Fquery%3Dhttps3A2F2Ftwitter.com2Fvijaytelevision2Fstatus2F1458683449779253254widget%3DTweet

    இந்தநிலையில் இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில், பிக் சீசன் 5ன் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சிறந்த பிளேயர் அவார்டு நிரூபிற்கு வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அக்ஷராவிற்கும் ஒரு அவார்டு வழங்கப்படும் நிலையில், ராஜுவிற்கு "நீ புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணி தான்" என்ற ஷாஸ் வழங்கப்படுகிறது.

    அதற்கு இனிமேல் தேவையான ஆணிகள் புடுங்கப்படும் என ராஜு சிரித்து கொண்டே கூறும் காட்சிகள் உள்ளது.ஒவ்வொரு சீசனிலும் இந்த விருது வழங்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் இதில் பிரச்னை ஏற்படுத்தும் விருதுகளும் இருப்பது வழக்கம். அந்த வகையில் இந்த டாஸ்கில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: