Home /News /entertainment /

முடிவுக்கு வரும் அரசியல் மாநாடு டாஸ்க்... வெற்றிப்பெற போவது யார்?

முடிவுக்கு வரும் அரசியல் மாநாடு டாஸ்க்... வெற்றிப்பெற போவது யார்?

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் வீட்டில் நடந்துக் கொண்டிருக்கும் அரசியல் டாஸ்க் இன்று முடிவுக்கு வருவது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் உறுதியாகியுள்ளது.

    பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது சிபி, ராஜு, இமான் அண்ணாச்சி, வருண், நிரூப், அமீர், சஞ்சீவ், அபினய், பாவ்னி, பிரியங்கா, அக்ஷரா, தாமரை என 12 போட்டியாளர்கள் உள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் டாஸ்குகள் கொடுக்கப்படுவது வழங்கம். இந்த டாஸ்குகள் பெரும்பாலும் பிரச்சனைகளை கிளப்பும் வகையில் இருக்கும்.

    அதன்படி இந்தவாரம் பிக் பாஸ் வீடு அரசியல் மாநாடாக மாறும் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஹவுஸ் மேட்ஸ் மூன்று குழுக்களாக பிரிந்து மூன்று கட்சிகளை உருவாக்க வேண்டும் என கூறப்பட்டது. அதன்படி இந்த டாஸ்கில் ராஜு, தாமரை, நிரூப் , சிபி ஒரு அணியாகவும் சஞ்சீவ், இமான், வருண், அக்ஷ்ரா ஒரு அணியாகவும், அபினய், பிரியங்கா, அமீர், பாவ்னி ஒரு அணியாக உள்ளனர்.

    சிபி அணியினர் 'பிக்பாஸ் மக்கள் முன்னேற்றக் கழகம்’ BBMK’ என்றும் சஞ்சீவ் அணியினர் "NPP” கட்சி என்றும், பிரியங்கா அணியினர் ‘உரக்க சொல்’ என்றும் தங்களது கட்சிகளுக்கு பெயரிட்டுள்ளனர். இந்த டாஸ்கில் அரசியல்வாதிகள் போல ஆண்கள் வெள்ளை சட்டை, வேஷ்டியிலும், பெண்கள் அனைவரும் சேலை அணிந்தும் இருந்தனர்.

    நேற்றைய நிகழ்ச்சியில் இந்த மூன்று அரசியல் கட்சிகளுக்கு இடையே விவாத மேடை வைக்கப்பட்டது. இதில் மூன்று அணியினரும் காரசாரமாக பேசிக்கொண்டனர். பிக் பாஸ் வீட்டில் இதுவரை நடந்த பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து இந்த டாஸ்கில் யாரும் எதிர்பாராத விதமாக சிபி அணியினர் 'பிக்பாஸ் மக்கள் முன்னேற்றக் கழகம்’ BBMK’ என்றும் சஞ்சீவ் அணியினர் "NPP” கட்சி இரண்டும் ஒன்றாக இணைந்தனர். இருவரும் ஒன்றாக இணைந்ததால் கட்சியின் பெயரை NPMK என மாற்றியும் கொண்டனர். இதனால் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.



    இந்நிலையில் இன்று இந்த டாஸ்க் முடிவுக்கு வருவது இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில் உறுதியாகியுள்ளது. அதில், அனைவரும் தங்களது ஓட்டுகளை பதிவு செய்யுமாறு பிக் பாஸ் அறிவிக்கிறார். இதனால் அனைவரும் ஓட்டு போடுகின்றனர். இறுதியாக 7 ஓட்டுகள் மக்கள் கட்சி, உரக்க சொல் கட்சி 5 ஓட்டுகளும் பெற்றிருப்பதாக நிரூப் அறிவிக்கிறார். இதனை தொடர்ந்து "NPP” கட்சியினர் ஒன்றாக பேசி கொண்டிருக்கின்றனர். அப்போது ஒருவர் வேறு கட்சிக்கு ஓட்டு போட்டிருப்பதாகவும், யாருடா அந்த கருப்பு ஆடு? எவண்டா அவன்? என சஞ்சீவ் மற்றும் இமான் பேசி கொண்டிருக்கின்றனர். அங்கு இருக்கும் நிரூப் திருதிருவென முழிக்கும் காட்சிகள் உள்ளது.



    இதனிடையே அன்சீன் வீடியோவாக வெளியாகி இருக்கும் மற்றொரு வீடியோ ஒன்றில் ராஜு , உலக உருண்டை ஒன்றை வைத்துக்கொண்டு எனது தாய்நாட்டின் மீது ஆணையாக NPMK கட்சிக்கு தான் ஓட்டு போட்டேன் என அனைவரும் சத்தியம் செய்ய சொல்கிறார். அதன்படி அனைவரும் ஓட்டு போட்ட நிலையில், அனைவரும் நமது கட்சிக்கு தான் ஓட்டு போடிருக்கிறீர்கள் என ராஜு கூறுகிறார். அங்கிருந்த அனைவரும் அப்போ நீ தான் ஓட்டு போடவில்லை என கூறுவதும் அதற்கு ராஜு சிரிக்கும் காட்சிகளும் உள்ளது. எனவே ராஜு உரக்க சொல் கட்சிக்கு வாக்கு அளித்தாரா? என்ற விவரம் இன்று தெரியவரும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி