Home /News /entertainment /

அரசியல் மாநாடாக மாறும் பிக் பாஸ் வீடு.... பிரச்சாரமாகும் பிரச்சனைகள்!

அரசியல் மாநாடாக மாறும் பிக் பாஸ் வீடு.... பிரச்சாரமாகும் பிரச்சனைகள்!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

சஞ்சீவ் - நிரூப் இடையே ஒரு போட்டி வைக்கப்பட்ட நிலையில், அதில் நிரூப் தோல்வி அடைந்ததால் அவரே நாமினேஷனில் இருப்பார் என பிக் பாஸ் அறிவித்தார்.

    பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி தற்போது வெற்றிகரமாக 64 நாட்களை நிறைவு செய்துள்ளது. 18 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் தற்போது சிபி, ராஜு, இமான் அண்ணாச்சி, வருண், நிரூப், அமீர், சஞ்சீவ், அபினய், பாவ்னி, பிரியங்கா, அக்ஷரா, தாமரை என 12 போட்டியாளர்கள் உள்ளனர்.

    நேற்றைய நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான வீட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் நடைபெற்றது. அதில் ஹவுஸ் மேட்ஸிற்கு மியூஸிக் சேர் போட்டி வைக்கப்பட்டது. கார்டன் ஏரியாவில் போடப்பட்ட நாற்காலிகளை சுற்றி போட்டியாளர்கள் ஓட வேண்டும், பாட்டு நின்றதும் அனைவரும் வேகமாக சென்று நாற்காலியில் உட்கார வேண்டும். அதில் நாற்காலி இல்லாமல் நிற்கும் நபர் தான் வெளியேற்றப்படுவார். இப்படி நடந்த டாஸ்கில் இறுதியில் அக்ஷ்ரா, அமீர் இருந்த நிலையில் அமீர் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து நாணயத்தின் பவரை பயன்படுத்தி தலைவர் பதவியை பறிக்க விருப்பமா? என பாவ்னியிடம் பிக் பாஸ் கேள்வி எழுப்பிய நிலையில் பாவ்னி ஆம் என கூறினார். இதனால் பாவ்னி தலைவரானார்.

    நாணயத்தை பயன்படுத்தி தலைவர் பதவியை பறிக்கும் நபர்களுக்கு பிக் பாஸ் வித்தியாசமான தண்டனைகளை வழங்கி வருகிறார். அதன்படி பாவ்னிக்கு, வீட்டில் இருக்கும் மூன்று பெண்களுக்கு உதவியாளராக இருக்க வேண்டும் என தண்டனை வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து நாமினேஷன் நடைபெற்றது. அதில், தாமரை, சிபி, அபினய், நிரூப், அக்ஷ்ரா, அமீர், இமான் ஆகியோர் இடம் பெற்றனர். நாணயத்தின் பவரை பயன்படுத்தி உங்களுக்கு பதிலாக வேறு ஒருவரை நாமினேட் செய்ய விருப்பமா?என நிரூப்பிடம் பிக் பாஸ் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து தனது பதிலாக சஞ்சீவி நாமினேட் செய்யப்படுவதாக நிரூப் அறிவித்தார். இதற்காக சஞ்சீவ் - நிரூப் இடையே ஒரு போட்டி வைக்கப்பட்ட நிலையில், அதில் நிரூப் தோல்வி அடைந்ததால் அவரே நாமினேஷனில் இருப்பார் என பிக் பாஸ் அறிவித்தார்.



    இந்தநிலையில் இன்று ஒரு புதிய டாஸ்க் வழங்கப்படுவது இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் தெரிகிறது. அதில், டாஸ்கை வாசிக்கும் ராஜு இந்த வீடு இதுவரை எவ்வளவோ பிரச்சனைகளை பார்த்திருகிறது. பிரச்னையை பிரச்சாரமாக மாற்றி பார்த்திருக்கிறதா? உங்கள் பலவீனங்களை பலமாக மாற்ற தயார் ஆகுங்கள். ஏனென்றால் இன்று முதல் இந்த பிக் பாஸ் வீடு அரசியல் மாநாடாக மாற போகிறது ஹவுஸ் மேட்ஸ் மூன்று குழுக்களாக பிரிந்து மூன்று கட்சிகளை உருவாக்க வேண்டும் என கூறுகிறார். அதில் நிரூப், அக்ஷ்ரா, சிபி ஒரு குழு என சஞ்சீவ் கூற, அதற்கு அக்ஷ்ரா, நான் உங்கள் அணியில் இருக்கிறேன் என கூறும் காட்சிகள் உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி