Home /News /entertainment /

பிரியங்காவிற்கு பரிசளித்த நிரூப் - என்ன கிப்ட் தெரியுமா?

பிரியங்காவிற்கு பரிசளித்த நிரூப் - என்ன கிப்ட் தெரியுமா?

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

மூன்றாவது ப்ரோமோவில், "அன்பின் பரிசு" என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். வைல்டு கார்டு என்ட்ரியாக அமீர் மற்றும் சஞ்சீவ் பங்கேற்றனர்.

    இதில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் நடைபெற்று அதில் குறைந்த வாக்குகள் நபர் வெளியேறுவார். அதன்படி ஒவ்வொருவராக வெளியேறிய நிலையில், கடந்த வாரம் தாமரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். மேலும் டிக்கெட் டு பினாலே டாஸ்கில் வெற்றி பெற்று அமீர் முதல் ஃபைனலிஸ்ட்டாக தேர்வான நிலையில், ராஜு, பிரியங்கா, பாவ்னி, நிரூப் அடுத்தடுத்து பைனலுக்கு சென்றனர்.

    தற்போது இந்நிகழ்ச்சி தொடங்கி 99 நாட்களை கடந்து வெற்றிகரமாக 100வது நாளை எட்டியுள்ளது. நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இறுதி வாரத்தில், யார் வெற்றியாளராக பிக் பாஸ் டைட்டிலை பெற போகிறார் என்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கடைசி வாரம் என்பதால் ஜாலியான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், "அன்பின் பரிசு" என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதில் வீட்டில் நீங்கள் விருப்பும் நபருக்கு ஒரு பரிசு கொடுக்க வேண்டும் என கூறப்படுகிறது. அதன்படி பிரியங்கா ராஜுவிற்கு பரிசளிக்கிறார். ராஜு, பாவ்னிக்கு பரிசு கொடுத்து அன்பை பரிமாறிக்கொள்ளும் கட்சிகளும் உள்ளது. பின்னர் பாவ்னி, நிரூப்பிற்கும், நிரூப் - பிரியங்காவிற்கும் பரிசளிக்கிறார். அதில், கைஜெயின் போல ஒன்றை பிரியங்காவிடம் கொடுக்கும் நிரூப், இதனை கழட்ட கூடாது என எங்க அம்மா கூறி இருக்கிறார், ஆனால் எங்க அம்மாவை போலவே நீயும் இருக்கிறாய் என கூறும் காட்சிகள் உள்ளது.

    முன்னதாக இன்று வெளியான முதல் ப்ரோமோவில், போட்டியாளர்களை பிக் பாஸாக மாற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. பிரியங்கா பிக்பாஸாக மாறி எல்லோருக்கும் தூங்க நேரம் கொடுக்கிறார். ராஜு பிக்பாஸாக இருக்கும் போது பிரியங்காவை அப்படியே மெயின் கதவு வழியாக வெளியே செல்லுங்கள் என காமெடியாக கூறும் காட்சிகள் இருந்தது.



    இரண்டாவது ப்ரோமோவில், ஒவ்வொருவரை வந்து பைனலுக்கு வந்திருக்கும் சக போட்டியாளர்கள் குறித்து பேச வேண்டும் என அமீர் கூறுகிறார். அதன்படி முதலில் வரும் பிரியங்கா ராஜு குறித்து பேசுகிறார். அப்போது, தன்னை சுத்தி இருக்கும் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருந்து பைனல் வந்திருப்பது சாதாரண விஷயம் அல்ல என்கிறார். இதனை தொடர்ந்து பிரியங்கா குறித்து பேசும் நிரூப், மக்களுக்கு எப்போதும் ஜாலியாக இருப்பவர்களை பிடிக்கும் என கூறுகிறார். பின்னர் ராஜு, மக்களுக்கு நம்மை பிடித்திருக்கிறது, அதனால் தான் நாம் இங்கு இருக்கிறோம் என கூறும் காட்சிகள் உள்ளது. இதனால் இன்றைய நிகழ்ச்சி உணர்ச்சி பூர்வமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி