Home /News /entertainment /

பணத்தில் விளையாடும் அமீர் – கடுப்பாகும் சக போட்டியாளர்கள்

பணத்தில் விளையாடும் அமீர் – கடுப்பாகும் சக போட்டியாளர்கள்

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

ஒவ்வொரு ஹவுஸ்மேட்டிடமும் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு போவதாக அமீர் விளக்கியிருக்கிறார். ஆனால், இறுதியில் பிரான்க் செய்ததாகக் கூறியது அனைவரையும் கடுப்பாக்கியுள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 5 இல், தற்போது ராஜு ஜெயமோகன், பிரியங்கா, பாவனி, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் மற்றும் அமீர் ஆகிய 7 போட்டியாளர்கள் இறுதி கட்ட போட்டியை எதிர்கொண்டுள்ளனர். அடுத்த வாரம் சீசன் ஃபினாலே நடைபெற உள்ள நிலையில், இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார், அதை விட, பணப்பெட்டியை எடுக்கப் போவது யார் என்று பரபரப்பாக இருக்கிறது.

    இன்று காலையில் வெளியாகிய ப்ரோமோவில், பிக் பாஸ் பணத்தை 11 லட்சமாக உயர்த்ஹ்டி இருப்பதை தெரிவிக்கும் காட்சிகள் இருந்தன. இதையடுத்து இந்த பணத்தை எடுத்துக் கொண்டு தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறவிருப்பதாக தெரிவிக்கிறார் அமீர்.டிக்கெட் டூ ஃபினாலே ஜெயித்து விட்டதால், அடுத்த வாரம் நான் ஃபைனல்ஸ் நிகழ்ச்சிக்கு கட்டயாமகப் போவேன் என்று தெரியும் ஆனால், வெற்றி பெற வாய்ப்பில்லை என்பதால் 11 லட்சம் எடுத்துக் கொண்டு வெளியேறப் போகிறேன் என்று முதல் புரோமோவில் அமீர் தெரிவிக்கிறார்.

    அமீர் வெளியேறப் போவதாகக் கூறிய போது, அவரை கட்டியணைத்து வாழ்த்துகள் சொல்கிறார் சிபி. ஆனால், தற்போது வெளியான இரண்டாவது புரோமோவில் அமீர் வீட்டை விட்டுச் செல்லப் போவதாக பிரான்க் செய்தகாட்சிகள் உள்ளன.

    நான் பிரான்க் பண்ணேன் என்று சிபியிடம் அமீர் கூறுகிறார். கடுப்பான சிபி, நீ பேசினது, சொன்ன விஷயம் எல்லாமே சரி தான் நீ நல்ல நடிகன், நடிக்கப் போகலாம் என்று பதிலடி கொடுத்தார். ஆனால், பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு போவதாக அமீர் எல்லாரிடமும் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

    ஒவ்வொரு ஹவுஸ்மேட்டிடமும் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு போவதாக அமீர் விளக்கியிருக்கிறார். ஆனால், இறுதியில் பிரான்க் செய்ததாகக் கூறியது அனைவரையும் கடுப்பாக்கியுள்ளது.

    ‘நீ பணப்பெட்டி எடுத்துட்டு போவேன்னு எனக்கு ஏற்கனவே தெரியும்’ என்று பாவனியும் அமீரிடம் கூறுகிறார். நான் பிரியங்கா அக்கா கிட்ட நேத்தே சொல்லிட்டேன் என்று அமீர் கூறும் காட்சிகள் உள்ளன.



    இதையும் படிங்க - AR Rahman: ஏ.ஆர்.ரஹ்மானை பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?

    தாமரையை எப்படியாவது பணப்பெட்டியை எடுக்க வைக்க நிரூப் பலவிதமாக முயற்சி செய்து பார்த்தார். ஆனால், ஒரு கோடி கொடுத்தால் கூட பணப்பெட்டி எனக்கு வேண்டாம் என்று தாமரை கூறியிருந்தார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக 3 லட்ச ரூபாய் பணப்பெட்டியுடன் நடிகர் சரத்குமார் வந்திருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக பணப்பெட்டியின் மதிப்பு அதிகரித்து தற்போது 11 லட்ச ரூபாயாக உயர்ந்துள்ளது. 25 லட்ச ரூபாய் வந்தால் நான் எடுத்துச் செல்வேன் என்று பாவனி நேற்றைய எபிசோடில் கூறியிருந்தார். இதற்கு மேலும் பணப்பெட்டியின் மதிப்பு அதிகரிக்குமா என்று தெரியவில்லை. 11 லட்சம் பணப்பெட்டியை அமீர் எடுக்கப்போகிறாரா இல்லையா என்ன நடந்தது என்பதை இன்றைய நிகழ்ச்சியில் காண்போம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி