• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: தாமரை பரிதாபத்தை உருவாக்குறாங்க - பிக் பாஸ் அமீர் அதிரடி

Bigg Boss Tamil 5: தாமரை பரிதாபத்தை உருவாக்குறாங்க - பிக் பாஸ் அமீர் அதிரடி

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், தாமரையை பற்றிய தனது கருத்தை நிரூப்பிடம் தெரிவிக்கிறார் அமீர்.

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து பாடகி இசைவாணி, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

    கடந்த வாரம் அபிஷேக் ராஜா வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார். அதோடு நடன இயக்குநர் அமீர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த நிலையில் நேற்று நடிகரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான சஞ்சீவ் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்துள்ளார். இது பிக் பாஸ் நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்தும் எனத் தெரிகிறது.



    தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், தாமரையை பற்றிய தனது கருத்தை நிரூப்பிடம் தெரிவிக்கிறார் அமீர். “தாமரை கிட்ட எல்லாரும் ஏமாறுறீங்கப்பா. ரொம்ப சாமர்த்தியமா இருக்காங்க, எல்லாருக்கும் தெரிலயா என்னான்னு தெரில” என அமீர் சொல்ல, “அறியாமையா இருக்கலாம்” என்கிறார் நிரூப்.

    அதற்கு “அறியாமை எல்லாம் இல்ல. அவங்களுக்கு வேண்டியவங்க விஷயத்துல கரெக்ட்டா காய் நகத்திக்குறாங்க. அவங்க மேல ஒரு பரிதாபத்தை உருவாக்குறாங்க. நெகட்டிவா தான் இருக்கு” என்கிறார் அமீர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: