Home /News /entertainment /

Bigg Boss Tamil 5: 11 லட்சம் பணத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அமீர்?

Bigg Boss Tamil 5: 11 லட்சம் பணத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அமீர்?

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பிக் பாஸ் தனது பணத்தை 11 லட்சமாக உயர்த்தியிருக்கிறார்.

    பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் தனிப்பட்ட காரணங்களுக்காக நமீதா மாரிமுத்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் வாரத்தில் குறைந்த வாக்குகள் பெற்றதால் நாடியா வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து பிரபல யூடியூபரான அபிஷேக் ராஜா இரண்டாவது நபராக வெளியேற்றப்பட்டார். பின்னர் சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி, அபிநய் ஆகியோர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அக்‌ஷரா - வருண் இருவரும் ஒன்றாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து இந்த வாரம் வைல்ட் கார்டு எண்ட்ரியில் உள்ளே வந்த சஞ்சீவ் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.



    தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பிக் பாஸ் தனது பணத்தை 11 லட்சமாக உயர்த்தியிருக்கிறார். இதையடுத்து இந்த பணத்தை எடுத்துக் கொண்டு தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறவிருப்பதாக தெரிவிக்கிறார் அமீர். ’டிக்கெட் டூ ஃபினாலே ஜெயிச்சிட்டேன், அடுத்த வாரம் நான் ஃபினாலேக்கு போவேன்னு தெரியும். பட் யோசிக்கும் போது வின் பண்ண வாய்ப்பே இல்லன்னு தோணுது. அதுவும் இல்லாம, இதுவு இல்லாம நடுவுல நின்னுட்டு இருப்பேன். யோசிச்சு பாக்கும் போது இது தான் புத்திசாலி தனமா இருக்கும்ன்னு தோணுது’ என்று அமீர் கூறுகையில், அவரை கட்டியணைத்து வாழ்த்துகள் சொல்கிறார் சிபி. என்ன நடந்தது என்பதை இன்றைய நிகழ்ச்சியில் காண்போம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி