ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Bigg Boss Tamil 5: பிக் பாஸ் வீட்டிற்குள் முளைத்த காதல்... வெட்கத்தில் பாவனி!

Bigg Boss Tamil 5: பிக் பாஸ் வீட்டிற்குள் முளைத்த காதல்... வெட்கத்தில் பாவனி!

பாவனி

பாவனி

மூன்றாவது ப்ரோமோவில், அமீர் - பாவ்னி இடையேயான காதல் காட்சிகள் உள்ளது. இது விளையாட்டா அல்லது தீவிரமானதா என இன்றைய நிகழ்ச்சியில் தெரியும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது ராஜு, பிரியங்கா, தாமரை, நிரூப், பாவ்னி, அபிநய், அமீர், அக்ஷ்ரா, வருண், சஞ்சீவ், சிபி ஆகிய 11 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வாரம் இவர்கள் 11 பேருமே நாமினேஷனில் இருப்பதாக பிக் பாஸ் அதிரடியாக அறிவித்தார். ஆனால் இந்த நாமினேஷன் பட்டியலில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள தினமும் டாஸ்குகள் வழங்கப்படும். அதில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷனில் இருந்து விலகுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

அதன்படி நடந்த முதல் டாஸ்கில் சிபி, இரண்டாவது டாஸ்கில் நிரூப் வெற்றி பெற்றதால் இருவரும் நாமினேஷன் பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து நாமினேஷன் லிஸ்டில் உள்ள பிரியங்கா, ராஜூ, வருண், அக்‌ஷரா, தாமரை, அமீர், சஞ்சீவ், பாவனி, அபினய் ஆகிய 9 பேருக்கும் டாஸ்குகள் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு டாஸ்க்கிலும் தோல்வியடையும் ஒருவர் இந்த டாஸ்கில் இருந்து வெளியேற வேண்டும் என கூறப்பட்டது. அதன்படி சஞ்சீவ், வருண், பிரியங்கா, பாவ்னி, அக்ஷ்ரா, ராஜு, அமீர், அபிநய் என ஒவ்வொருவராக தோல்விடையைந்து வெளியேறிய நிலையில், இறுதியாக தாமரை வெற்றி பெற்று நாமினேஷனில் இருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.

இந்த நிலையில் இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில், அமீர் - பாவ்னி இடையேயான காதல் காட்சிகள் உள்ளது. அதில் தைரியம் இருந்தால் ஓப்பனாக சொல் என்றாள், நானும் சொல்லிவிட்டேன் என பிரியங்காவிடம், அமீர் கூறுகிறார். அதற்கு பிரியங்கா, அப்படியா? காதலா? என்கிறார். மேலும் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு காதல் கதையா.. இதற்கு தான் ஆசைப்பட்டேன் என்கிறார். அதற்கு பாவ்னி எனக்கு வெட்கம் வருகிறது என சிரித்து கொண்டே கூறும் காட்சிகள் உள்ளது. அமீர் வந்த நாள் முதல் பாவ்னியிடம் நெருக்கமாக பழகி வரும் நிலையில் இருவரிடையே காதல் மலருமா என காத்திருந்து பார்க்கலாம்.

முன்னதாக வெளியான முதல் ப்ரோமோவில் இன்று தோல்வியடைந்தவர்களுக்கு மீண்டும் ஒரு டாஸ்க் வழங்கப்படும் காட்சிகள் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இருந்தது. அதில் இதுவரை வெற்றிபெற்ற சிபி, நிரூப் , தாமரையை தவிர மீதம் உள்ள 8 போட்டியாளர்களும் ஜோடியாக பிரிந்து யாரை காப்பாற்ற வேண்டுமோ அவர்களது புகைப்படத்தை காட்ட வேண்டும். இதில் இருவருமே ஒரே புகைப்படங்களை தேர்வு செய்து காட்ட வேண்டும் என கூறப்படுகிறது. இதில் அபிநய் - பிரியங்கா, அமீர் - பாவ்னி, அக்ஷ்ரா - வருண், ராஜு - சஞ்சீவ் ஜோடியாக பிரிந்திருக்கின்றனர்.

அப்போது சஞ்சீவ், ராஜு இருவரும் சஞ்சீவ் புகைப்படத்தை காட்டுகின்றனர். இதனை தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில், இந்த வார நாமினேஷனில் இருப்பவர்கள் பெயர்களை பிக் பாஸ் அறிவிக்கிறார். அதில், அபிநய், பிரியங்கா, பாவ்னி, வருண், அக்ஷ்ரா மற்றும் ராஜு என அறிவித்துள்ளார். இந்தவாரம் அபிநய், அல்லது வருண் இருவரில் இருந்து ஒருவர் வெளியேற வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bigg Boss Tamil 5