• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss 5 : இரட்டை வேடம் போடும் அபிஷேக் - சிக்குவாரா பாவனி?

Bigg Boss 5 : இரட்டை வேடம் போடும் அபிஷேக் - சிக்குவாரா பாவனி?

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

Bigg Boss Promo: நிரூப், பிரியங்கா மற்றும் ஸ்ருதி பாதாள சிறையில் அடைக்கப்பட்டு சில மணி நேரங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

  • Share this:
    விஜய் டிவி-யில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது. இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார், மேலும் முதல் எலிமினேஷனாக நாடியா வெளியேற்றப்பட்டுள்ளார்.

    தற்போது 16 போட்டியாளர்கள் உள்ளனர். இதில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் அபிஷேக், அக்ஷரா, அபினய், இசைவாணி, சின்னப்பொண்ணு, தாமரை செல்வி, ஐக்கி பெர்ரி, பிரியங்கா, பாவ்னி ஆகிய 9 பேர் உள்ளனர்.

    இந்தநிலையில் நாமினேஷன் மாற்றம் கொண்டு வரும் வகையில் பஞ்சதந்திரம் என்ற புதிய டாஸ்க் ஒன்று கடந்த செய்வாய்க்கிழமை கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கிற்காக பிக்பாஸ் வீடு அருங்காட்சியகமாக மாறுகிறது. இதில் விலை மதிக்க முடியாத நிலம், நீர், ஆகாயம், நெருப்பு, காற்று ஆகிய 5 நாணயங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதை திருடுவதும், எடுத்ததை பாதுகாப்பதும் உங்கள் வேலை. ஒரு நாணயத்தை எடுத்தவுடன் அதனை பிக் பாஸிடம் காண்பிக்க வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருந்தால் அவர், அதில் இருந்து விடுவிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

    ஒருவேளை அவர் பெயர் நாமினேஷனில் இல்லை என்றால் அவர் விருப்பப்படும் நபரை சேவ் செய்து கொள்ளலாம் என பிக் பாஸ் அறிவித்தார். இதில் ஒருவர் காயினை திருட அவரிடம் இருந்து மற்றொருவர் திருட என நேற்று முழுவதும் இந்த டாஸ்க் நடைபெற்றது. மேலும் இந்த டாஸ்கின் போது,காயினை எடுக்கும் போது ஹவுஸ் மேட்ஸ் யாரவது பார்த்து விட்டால் அவர் ஜெயிலுக்கு செல்ல வேண்டும் என்பது ரூல்.

    அதன்படி நேற்று நிரூப், பிரியங்கா மற்றும் ஸ்ருதி பாதாள சிறையில் அடைக்கப்பட்டு சில மணி நேரங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த டாஸ்கில் குழுவாக பிரிந்து விளையாடினர், சிலர் சின்னபொண்ணுவையும், சிலர் தாமரைச் செல்வியையும் காப்பாற்ற நினைக்கின்றனர். இந்த டாஸ்க் கடந்த இரண்டு நாட்களாக விடிய விடிய நடைபெற்று வரும் நிலையில், இன்றும் இந்த டாஸ்க் தொடர்வது இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் உறுதியாகியுள்ளது.

    அதில் பாவ்னி, மற்றும் மது அமர்ந்திருக்கின்றனர், அங்கு வரும் அபிஷேக் டாப் ஐந்து போட்டியாளர்களில் நீ, நான் இருக்க வேண்டும், எக்காரணத்தை கொண்டும் வருணை வர விடக்கூடாது என்கிறார். அதன்பின்னர் வருணிடம் சென்று உன்னை கடைசி வரை ஹாலில் விட மாட்டார்கள், எனவே ஹாலை டார்கெட் பண்ணு என்கிறார். அதன்பின்னர் பாவ்னியிடம் வந்து, நான் பேசியே அங்கு சென்று விடுவேன் என என்னிடம் வருண் சவால் விடுகிறான், என்னை பொறுத்தவரை அந்த நாணயம் வருணிற்கு சென்று விடக்கூடாது என பாவ்னியிடம் கூறுகிறார்.



    ஓ.. அவன் அப்படி சொன்னானா? என பாவனியும் கேட்கும் காட்சிகள் உள்ளது. இதனிடையே ஒரு நாணயத்தை எடுக்க ஸ்ருதி அதன் அருகில் அமர்ந்திருக்கிறார், அபிஷேக் இப்படி பேசுவதை கேட்டு அது அவர்கள் டீம் முடிவு, நீ ஏன் இதனை கூறுகிறாய் என அவர் கேட்கும் காட்சிகளும் ப்ரோமோவில் உள்ளது. இந்த டாஸ்கில் வெற்றி பெற்று யார் நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்படுவார் என்பது குறித்து இன்று தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: