• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: ’மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குவது என் வழக்கம்’ - கமல் சூசகம்!

Bigg Boss Tamil 5: ’மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குவது என் வழக்கம்’ - கமல் சூசகம்!

பிக் பாஸ் தமிழ் 5

பிக் பாஸ் தமிழ் 5

’மக்கள் தீர்ப்புக்கு என்றும் தலை வணங்குவது என் வழக்கம். அதை நம்பிக் கொண்டிருக்கிறேன், இன்றும் நம்புவேன்’ என்றவாறு கார்டை திறக்கிறார் கமல்.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 இந்த மாத தொடக்கத்தில் தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு நாடியா சங் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஆளாக வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது 16 போட்டியாளர் உள்ளனர். இதற்கிடையே இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்பதை தெரிந்துக் கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

    தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் அபிஷேக் மற்றும் சின்னப்பொண்ணு இருவரும் தங்களது எலிமினேஷன் கேள்விக்கான விடைக்காக காத்திருக்கிறார்கள். பார்வையாளர்களைக் காட்டி ‘எனக்கு அங்கிருந்து செய்தி வந்துவிட்டது’ என்று கமல் கூற, பார்வையாளர் ஒருவர் வந்து, எவிக்‌ஷன் கார்டை கொடுத்துவிட்டுச் செல்கிறார். அபிஷேக் மற்றும் சின்னப்பொண்ணுவை கை காட்டி, ’இந்த இரண்டு பேரில் யார் வெளியேறப்போகிறார்கள் என்பதை, மக்கள் தீர்ப்பாக அளித்திருக்கிறார்கள்’ என்கிறார். ’மக்கள் தீர்ப்புக்கு என்றும் தலை வணங்குவது என் வழக்கம். அதை நம்பிக் கொண்டிருக்கிறேன், இன்றும் நம்புவேன்’ என்றவாறு கார்டை திறக்கிறார்.



    இதற்கிடையே இந்த வாரம் அபிஷேக் ராஜா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: