• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: ஹவுஸ் மேட்ஸை குழப்பும் அபிஷேக் - கடுப்பான சிபி!

Bigg Boss Tamil 5: ஹவுஸ் மேட்ஸை குழப்பும் அபிஷேக் - கடுப்பான சிபி!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

இதனிடையே அன்சீன் வீடியோ ஒன்றில், வருணின் நாணயத்தை பாவ்னி அவருக்கே தெரியாமல் திருடி விடுவது தெரிகிறது

  • Share this:
    விஜய் டிவி-யில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது இரண்டு வாரங்களை கடந்துள்ளது. இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார், மேலும் முதல் எலிமினேஷனாக நாடியா வெளியேற்றப்பட்டுள்ளார்.

    தற்போது 6 போட்டியாளர்கள் உள்ள நிலையில் நேற்று இந்த வார கேப்டனுக்கான டாஸ்க் நடைபெற்றது. அதில், சிபி வெற்றி பெற்று இந்த வீட்டின் தலைவரானார். இதனை தொடர்ந்து நாமினேஷன் நடைபெற்றது, அதன்படி அபிஷேக், அக்ஷரா, அபினய், இசைவாணி, சின்னப்பொண்ணு, தாமரை செல்வி, ஐக்கி பெர்ரி, பிரியங்கா, பாவ்னி ஆகிய 9 பேர் நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.

    இந்தநிலையில் இந்த நாமினேஷன் லிஸ்டில் மாற்றத்தை கொண்டுவரும் வகையில் இன்று ஒரு புதிய டாஸ்க் ஒன்றை கொடுப்பது இன்று வெளியான முதல் ப்ரோமோவில் தெரிகிறது. அதில், பஞ்சதந்திரம் என பெயரிடப்பட்டுள்ள இந்த டாஸ்க்கிற்காக பிக்பாஸ் வீடு அருங்காட்சியகமாக மாறுகிறது. இதில் விலை மதிக்க முடியாத 5 நாணயங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதை திருடுவதும், எடுத்ததை பாதுகாப்பதும் உங்கள் வேலை. ஒரு நாணயத்தை எடுத்தவுடன் அதனை பிக் பாஸிடம் காண்பிக்க வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருந்தால் அவர், அதில் இருந்து விடுவிக்கப்படுவார் என கூறப்படுகிறது. ஜக்கி, மது, மற்றும் வருண் தலா ஒரு நாணயத்தை எடுத்திருப்பது ப்ரோமோவில் உறுதியாகியுள்ளது.

    இதனிடையே அன்சீன் வீடியோ ஒன்றில், வருணின் நாணயத்தை பாவனி அவருக்கே தெரியாமல் திருடி விடுவது தெரிகிறது. பாவனி இந்த வார நாமினேஷன் லிஸ்டில் உள்ள நிலையில், அவர் வெற்றி பெற்றால் நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்படுவார் என எதிபார்க்கப்படுகிறது. இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் தாமரை செல்விக்கு ஆதரவாக அபிஷேக், பிரியங்கா மற்றும் ராஜு பேசுகின்றனர். முதலில் தாமரையிடம் பேசும் அபிஷேக் உங்களுக்காக தான் நாங்கள் இதனை செய்கிறோம் என கூற, தாமரை அவரது காலில் விழுந்து நீங்கள் கூறியதே போதும் என அழுகிறார்.



    இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், சிபி மற்றும் அபிஷேக் இடையே பிரச்சனை ஏற்படுவது தெரிகிறது. எந்த ஒரு டாஸ்க் கொடுத்தாலும் அதில் ஸ்டேட்டர்ஜி பயன்படுத்தி அபிஷேக் விளையாடி வருகிறார். ஏற்கனவே அவர் பேசுவது பிடிக்கவில்லை என சிபி இந்த வாரம் அபிஷேக்கை நாமினேட் செய்துள்ள நிலையில், சிபி - அபிஷேக் இடையே மோதல் ஏற்படுவது ப்ரோமோவில் தெரிகிறது. அதில், இது ஒரு மன விளையாட்டு, செண்டிமெண்ட் தேவையில்லை என அபிஷேக் பேசுகிறார். அதற்கு சிபி, இதனை ஆரம்பத்திலேயே கூறி இருக்க வேண்டும், இங்கு இருப்பவர்கள் எல்லாம் லூசா? என கோபமாக பேசுகிறார். இதனால் இன்று நடைபெறும் பஞ்சதந்திரம் டாஸ்கால் எண்ணற்ற பிரச்சனைகள் ஏற்படுவது தெரிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: