• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Promo: ’என் மூஞ்சு டிவி-ல வரணும்ன்னா என்ன வேணும்ன்னாலும் செய்வேன்’ - அபிஷேக்

Bigg Boss Promo: ’என் மூஞ்சு டிவி-ல வரணும்ன்னா என்ன வேணும்ன்னாலும் செய்வேன்’ - அபிஷேக்

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் வீட்டை விட்டு நாடியா சங் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஆளாக வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது 16 போட்டியாளர் உள்ளனர்.

  • Share this:
    விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு நாடியா சங் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஆளாக வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது 16 போட்டியாளர் உள்ளனர். இதைத் தொடர்ந்து தற்போதைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    ’அக்‌ஷராவை உன் கிட்ட இருந்து பிரிக்கணும்ன்னா அதுக்கு 2 நிமிஷம் ஆகாது’ என்கிறார் அபிஷேக். அதற்கு ‘பார்த்ததுமே கண்டுப்பிடிக்க இது என்ன பாரத விலாஸா? பிக் பாஸ் வீடுங்க. உங்க கூட இருக்கவங்க எல்லாரும் உங்கள செஞ்சிட்டு இருக்காங்க’ என பிரியங்காவிடம் கூறுகிறார் ராஜு. அப்போது, ‘நான் தான் செய்றேன்... எனக்கு அட்டன்ஷன் கிடைக்கும். இவ கூட ஒட்டினா தான் என் மூஞ்சு டிவி-ல தெரியும்னா, நா பண்றேங்குறேன்’ என்கிறார் அபிஷேக்.



    திரும்பவும் ‘உங்கக் கூட வாக்குவாதம் பண்ணா தான் என் மூஞ்சு டிவி-ல வரும்’ என்று சொல்ல, அதற்கு ‘இது ரொம்ப கேவலமான எண்ணம்’ என்கிறார் அண்ணாச்சி. அதற்கு ‘அப்படியே வச்சிக்கோங்க’ என்கிறார் அபிஷேக்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: