• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் வந்த முக்கிய போட்டியாளர் - ஹவுஸ் மேட்ஸ் அதிர்ச்சி!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் வந்த முக்கிய போட்டியாளர் - ஹவுஸ் மேட்ஸ் அதிர்ச்சி!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

அபிஷேக் ராஜா பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தவரை அனைவரையும் மூளை சலவை செய்து

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நமீதா மாரிமுத்து தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறினார். இதனை தொடர்ந்து நாடியா, அபிஷேக், சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது இசைவாணி, ராஜு ஜெயமோகன், பிரியங்கா, அபினய் வாடி, பாவ்னி, வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 12 போட்டியாளர்கள் உள்ளனர்.

    இவர்களில் இசைவாணி, அபினய், பாவ்னி, இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 9 பேர் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்து வருகிறது. ஆனால் கடந்த சீசன்கள் அளவிற்கு விறுவிறுப்பு இல்லை என்ற கருத்து நிலவுவதால், தற்போது வழங்கப்படும் டாஸ்குகளில் பிடிக்காத ஒருவொருக்கொருவை பிக் பாஸ் கோர்த்து விட்டு பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறார்.

    இன்றைய முதல் ப்ரோமோவில் தாமரை - இசை இவரும் மாறி மாறி தலையில் முட்டையை உடைத்து கொள்கின்றனர். இதனை இரண்டாவது ப்ரோமோவில், "உள்ளே வெளியே" என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இதில் இமான் - ஐக்கி மற்றும் பிரியங்கா - ராஜு இடையே போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் இமான், ராஜு, பிரியங்கா பாகற்காய் ஜூஸ் குடிப்பது ப்ரோமோவில் தெரிகிறது. மேலும் இந்த டாஸ்க்கிலும் வருண் - நிரூப் இடையே பிரச்னை ஏற்படுகிறது.

    இந்தநிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், ஏராளமான கிப்ட் பாக்ஸ்கள் உள்ளது. மேலும் டையஸ் வழங்கப்பட்டுள்ளது. இமான் டையஸை போட்டு அதில் வரும் எண்கள் அடிப்படையில் கிப்ட் பாக்ஸ்களை திறக்கிறார். முதலில் திறக்கும் பெட்டியில் சிக்கன் இருக்கிறது, இதனை பார்த்து ஹவுஸ் மேட்ஸ் உற்சாகமடைகின்றனர். இதனை தொடர்ந்து மற்றொரு பெட்டியை திறக்க அதிலிருந்து ஒரு நபர் வெளியே வருகிறார். இதனை பார்த்து இமான், தாமரை, பிரியங்கா ஆகியோர் அதிர்ச்சியில் இருக்கும் காட்சிகள் உள்ளது. அந்த நபர் இரண்டாவது நபராக வெளியேற்றப்பட்ட அபிஷேக் ராஜா போலவே தோற்றம் இருக்கிறது.

    அபிஷேக் ராஜா பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தவரை அனைவரையும் மூளை சலவை செய்து தனது கருத்துக்களை திணித்து வந்தார். மேலும் பிரியங்கா, நிரூபிடம் ஒன்றாகவே அபிஷேக் இருந்தார். பிரியங்கா புகழ் பெற்ற நபர் என்பதால் அவருடன் இருந்தால் தான் தனது முகம் மக்களுக்கு தெரியவரும் என்பதால் தான் அவருடன் இருக்கிறேன் என்று வெளிப்படையாகவே கூறி வந்தார். மேலும் என்ன டாஸ்க் நடந்தாலும் அதில் பிரச்னையை ஏற்படுத்தி கொண்டிருந்ததால் அவர்மூலம் நல்ல கண்டென்ட்டுகள் கிடைத்தது.



    அபிஷேக் இருந்தவரை அவர் தான் மூன்று ப்ரோமோக்களிலும் பெரும்பாலும் காணப்படுவார். ஆனால் அவரது செயல் சக ஹவுஸ் மேட்ஸ் மட்டுமின்றி, ரசிகர்களுக்கும் வெறுப்பை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு எதிராக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வந்தனர். இந்த நிலையில் அவர் மீண்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்திருப்பது ஹவுஸ் மேட்ஸிற்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாகவே இருக்கிறது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: