• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: யாருக்கு தகுதி இல்லை? தாமரை - பிரியங்கா இடையே நடக்கும் மோதல்!

Bigg Boss Tamil 5: யாருக்கு தகுதி இல்லை? தாமரை - பிரியங்கா இடையே நடக்கும் மோதல்!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

இந்தநிலையில் இன்று திங்கட்கிழமை என்பதால் இந்த வாரத்திற்கான தலைவர் டாஸ்க் நடைபெறுகிறது

  • Share this:
    விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் தொடங்கி வெற்றிகரமாக 50 நாட்களை எட்டியுள்ளது. கடந்த 4 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவ்னி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

    இதில் தனிப்பட்ட காரணங்களுக்கான நமீதா இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் நாடியா, அபிஷேக் ராஜா , சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா என அடுத்தடுத்து வெளியேறினர். கடந்த வாரம் அக்ஷ்ரா, பாவ்னி, தாமரை, சிபி, இமான், அபினய், இசைவாணி, ஐக்கி, நிரூப் ஆகிய 9 பேர் நாமினேஷன் லிஸ்டில் இருந்த நிலையில், நேற்று இசைவாணி வெளியேற்றப்பட்டுள்ளார். இசைவாணியிடம் ஒரு நாணயம் உள்ளது. இந்த நாணயம் வைத்திருக்கும் நபர்கள் நாமினேஷனில் இருந்தால் தனக்கு பதிலாக வேறு ஒருவரை தேர்ந்தெடுத்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் இதுவரை அதனை யாரும் செய்ததில்லை. முன்னதாக ஸ்ருதியுடன் ஒரு நாணயம் இருந்தும் அவர் அந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து சனிக்கிழமை இசைவாணி, நிரூப், பாவ்னியிடம் கேள்வி எழுப்பிய கமல், காயின் வெச்சிருந்தும் நாமினேட் சமயத்துல ஏன் உபயோகிக்கலை?” என்று கேட்டார். அதற்கு “மக்கள் காப்பாத்திடுவாங்கன்னு நம்பிக்கையிருக்கு” என்று நிரூப் கெத்தாக சொல்ல “மக்கள் மேல நம்பிக்கையிருக்கு. போன முறையே காயின் யூஸ் பண்றதுல குழம்பிட்டேன். அதான் யோசிச்சு உபயோகிக்கலாம்னு வெச்சிருக்கேன்” என்று விளக்கம் அளித்தார் இசைவாணி. ஆனால் தற்போது குறைவான வாக்குகள் பெற்றதால் அவர் வெளியேறியுள்ளார்.

    இதனிடையே அபிஷேக் ராஜா வைல்டுக்கு கார்டு எண்ட்ரியாக மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். இதனால் தற்போது 12 போட்டியாளர்கள் உள்ளனர். சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் கடந்த வாரம் நடந்த நிகழ்வுகள் குறித்து கமல் விவாதித்தார். அப்போது வருண் தற்போது நன்றாக விளையாடுவதாக பாராட்டிய கமல், சிபி இன்னும் சிறப்பாக விளையாடுமாறு கூறினார். மேலும் பாவ்னி குறித்து ராஜுவும், இசைவாணி குறித்து இமான் அண்ணாச்சியும், தாமரை குறித்து பிரியங்காவும், ஐக்கி குறித்து சிபியும் பேசினர்.

    இந்தநிலையில் இன்று திங்கட்கிழமை என்பதால் இந்த வாரத்திற்கான தலைவர் டாஸ்க் நடைபெறுகிறது. அதில் அபினய், இமான், ராஜு, தாமரை, அக்ஷ்ரா, வருண் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதில் கொடுக்கப்பட்ட பெட்டியை கொண்டு பஞ்சுகளை சேகரிக்க வேண்டும் என்றும் யார் தலைவராக தகுதி இல்லை என்பதை மற்ற போட்டியாளர்கள் முடிவெடுத்து ஒருமனதாக சொல்ல வேண்டும் என பிக் பாஸ் அறிவிக்கிறார். இதில் அனைவரும் போட்டிப்போட்டு கொண்டு பஞ்சுகளை சேகரிக்கின்றனர். அப்போது பிரியங்கா தாமரையை பார்த்து 'நீ தலைவர் ஆனால் என்ன செய்வாய்' என கேட்கிறார். அதற்கு தாமரை 'நீங்க சொல்லிட்டு தான் செஞ்சீங்களா?' என கேள்வி கேட்டார். தாமரை இப்படி கேள்வி கேட்பார் என பிரியங்கா மட்டுமின்றி மற்றவர்களும் எதிர்பார்க்கவில்லை. இதனால் நிரூப் உள்ளிட்ட சிலர் கைத்தட்டுகின்றனர். இறுதியாக தாமரை போட்டியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.



    தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், எனக்கு தகுதி இல்லை என எதற்காக கூறினீர்கள் என பிரியங்காவிடம், தாமரை கேட்கிறார். அதற்கு பிரியங்கா, வாய்ப்புகள் வந்தா தான் இந்த வீட்டில் உள்ள கசப்புகளை சரி செய்ய வேண்டுமா? அதனை சீக்கிரமாகவே சரி செய்துவிடு என்கிறார். இதனால் கடுப்பாகும் தாமரை, சம்பந்தம் இல்லாமல் பேசக்கூடாது, என்ன கசப்பு என நேரடியாக கூறுங்கள் என்கிறார். அதற்கு பிரியங்கா, தற்போது நீ இருக்கும் மன நிலைமையில் கேப்டன் ஆக உனக்கு தகுதி இல்லை என கூற, அதனை கூறும் தகுதி உங்களுக்கு இல்லை என தாமரை பதிலுக்கு கூறும் காட்சிகள் உள்ளது. அப்போது அங்கிருக்கும் பாவனி எழுந்து செல்லும் காட்சிகள் உள்ளது. நேற்றைய நிகழ்ச்சியில் சண்டை போடுவதால் நான் மக்களுக்கு தெரிய வாய்ப்புள்ளது என தாமரை கூறியிருந்த நிலையில், இன்றும் தாமரை சண்டை போடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: