• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: யார் பேச்சையும் கேட்க மறுக்கும் நிரூப்...

Bigg Boss Tamil 5: யார் பேச்சையும் கேட்க மறுக்கும் நிரூப்...

பிக் பாஸ்

பிக் பாஸ்

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், நிரூப்பிற்கும் பாவனிக்கும் பயங்கர வாக்குவாதம் ஏற்படுகிறது.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா இருவரும் அடுத்தடுத்த இரண்டு வாரங்களில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட, பாடகி சின்னப்பொண்ணு கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை சுருதி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.



    தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், நிரூப்பிற்கும் பாவனிக்கும் பயங்கர வாக்குவாதம் ஏற்படுகிறது. ’நிரூப் ரூல்ஸை பிரேக் பண்ற வரைக்கும் நான் இந்த காயினை வைக்க மாட்டேன். நீங்க பண்ணது ரொம்ப தப்பு’ என்கிறார் பாவனி. அதற்கு ‘உன் ஒருத்தனால நாங்க எல்லாரும் கஷ்டப்படணுமா?’ என ப்ரியங்கா கேட்க, ‘தண்டனை தர போறாங்கன்னு தெரிஞ்சு போச்சு, அப்போ நான் ஏன் கேக்கணும்?’ என்கிறார் நிரூப். ’நான் ஏன் பண்ணனும்ன்னா, அப்போ நாங்களும் இதையே செஞ்சிருக்கலாமே’ என கோபமாகிறார் பிரியங்கா.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: