Home /News /entertainment /

Bigg Boss Tamil 5: விமர்சனம் செய்யும் நாம் சரியாக இருக்கிறோமா? பிரியங்காவை சரமாரியாக கேள்வி கேட்ட கமல்..

Bigg Boss Tamil 5: விமர்சனம் செய்யும் நாம் சரியாக இருக்கிறோமா? பிரியங்காவை சரமாரியாக கேள்வி கேட்ட கமல்..

ப்ரியங்கா

ப்ரியங்கா

Bigg Boss Tamil 5 Today Promo :நீங்க சரியா இருக்கீங்களா என்பதை முதலில் பாருங்கள். பிறகு மற்ற போட்டியாளர்கள் மீது குறை சொல்லலாம் .

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 வில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடுகளுக்கு ஆவலாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த வாரம் விருந்தே காத்திருக்கிறது. இன்றைய முதல் ப்ரோமொவிலேயே, எபிசோடு பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள கமல், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் சரவடியை கொளுத்தி போட்டுள்ளார். விதிமீறல் என்றால் எல்லா போட்டியாளர்களுக்கும் ஒன்று தான். யாருக்கும் சலுகை கிடையாது என்பதை கமல் போட்டியாளர்களுக்குத் தெளிவாக விளக்கியுள்ளார்.

ஒவ்வொரு வாரமும் வழங்கப்படும் டாஸ்க்கில், போட்டியாளர்கள் எப்படி விளையாடுகிறார்கள், எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பற்றி எல்லாம் வார இறுதி எபிசோடுகளில் கலந்துரையாடப்படும்.

தெரிந்தே தவறு செய்யும் போட்டியாளர்களை கமல் கேள்வி கேட்ட மறுக்கிறார், செல்லமாக தட்டிக் கொடுப்பது போலவே சிரித்துக் கொண்டே எதுவும் பேசாமல் இருக்கிறார் என்பது ரசிகர்களின் மிகப்பெரிய மனக்குறையாக இருந்து வந்தது. இந்நிலையில், சற்று முன் வெளியான ப்ரோமோவில், பிரியங்காவை சரமாரியாக கேள்வி கேட்டுள்ளது ரசிகர்களிடம் ஆரவராத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நீங்க சரியா இருக்கீங்களா என்பதை முதலில் பாருங்கள். பிறகு மற்ற போட்டியாளர்கள் மீது குறை சொல்லலாம் என்று கமல் பிரியங்காவிடம் கூறினார்.

அக்ஷரா விதிமீறியத்தை சுட்டிக்காட்டிய நீங்கள் மட்டும் விதி மீறவில்லையா என்ற கேள்விக்கு பிரியங்கா சரியாக பதில் சொல்லாமல் மழுப்பினார். உங்களுக்கு மட்டும் விதிகள் தளர்வு என்று எதுவும் கிடையாது. விதிமீறல் என்பது அனைவருக்கும் பொருந்தும் என்பதை சுட்டிக்காட்டினார்.

இந்த வாரம் பஞ்சதந்திரம் என்ற புதிய டாஸ்க் ஒன்று கடந்த செய்வாய்க்கிழமை அன்று கொடுக்கப்பட்டது.இதில் விலை மதிக்க முடியாத நிலம், நீர், ஆகாயம், நெருப்பு, காற்று ஆகிய 5 நாணயங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதை திருடுவதும், எடுத்ததை பாதுகாப்பதும் உங்கள் வேலை. ஒரு நாணயத்தை எடுத்தவுடன் அதனை பிக் பாஸிடம் காண்பிக்க வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருந்தால் அவர், அதில் இருந்து விடுவிக்கப்படுவார் என பிக் பாஸ் அறிவித்துள்ளார்.

also read : பிக் பாஸ் வீட்டில் இனி யாரும் பேசியே விபூதி அடிக்க முடியாது.. ரெய்டு விடும் கமல்ஹாசன்!

16 போட்டியார்களுக்கு 5 நாணயம். யார் எப்படி நாணயத்தைத் திருடுவது, மற்றவர்கள் அறியாமல் பாதுகாத்துக் கொள்வது என்பது மட்டுமல்லாமல், மற்றவர்கள் எடுத்த நாணயங்களை ஏமாற்றி எப்படி பெற்றுகொள்வதும் டாஸ்க்கின் ஒரு பகுதியாக இருந்தது, அபிஷேக் ராஜா ஒவ்வொருவரிடமும் சென்று நான் உங்களைத் தான் காப்பாற்றப் போகிறேன் என்று கிட்டத்தட்ட அனைவரையும் மாற்றி மாற்றி பேசி, ஏமாற்றி இருக்கிறார். நேற்றைய எபிசோடில், பிக் பாஸிடம் மறைமுகமாக கொட்டு வாங்கிய அபிஷேக் இன்று கமலிடம் இன்று தப்பிப்பாரா?


:விஜய் டிவி-யில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது. இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார், மேலும் முதல் எலிமினேஷனாக நாடியா வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 16 போட்டியாளர்கள் உள்ளனர். இதில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் அபிஷேக், அக்ஷரா, அபினய், இசைவாணி, சின்னப்பொண்ணு, தாமரை செல்வி, ஐக்கி பெர்ரி, பிரியங்கா, பாவ்னி ஆகிய 9 பேர் உள்ளனர்.

9 பேரில் இன்று யார் காப்பாற்றப்படுகிறார்கள் என்பது சில மணி நேரங்களில் தெரிந்து விடும். மேலும், யார் இன்று நாணயத்தை பயன்படுத்தப்போகிறார் என்பது ஆட்டத்தை மேலும் சுவாரஸ்யமாக மாற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Bigg Boss Tamil 5

அடுத்த செய்தி