• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: பிரியங்காவை வில்லி என்ற தாமரை செல்வி

Bigg Boss Tamil 5: பிரியங்காவை வில்லி என்ற தாமரை செல்வி

பிக்பாஸ் தமிழ் 5

பிக்பாஸ் தமிழ் 5

வருண் - நிரூப்பின் கண்ணாடியாகவும், ராஜு - பிரியங்காவின் கண்ணாடியாகவும், அக்ஷ்ரா - பாவ்னியின் கண்ணாடியாகவும், தாமரை - இசைவாணியின் கண்ணாடியாகும் பிரதிபலித்தனர்.

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தினமும் டாஸ்குகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த வாரத்தில் ’உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி’ என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. அதில், போட்டியாளர்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு, டீம் ஏ கண்ணாடியாக மாறி, டீம் பி-யினரை பிரதிபலிக்க வேண்டும் என பிக் பாஸ் அறிவித்தார். மேலும் இந்த டாஸ்கில் லிங்கிங் எரியாவில் ஜோடிகளாக பிரிக்கப்பட்ட இருவரும் கைக்கோர்த்து சேர்ந்து நின்று ஒருவர் பற்றிய கருத்துக்களை சொல்ல வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    முதல் சுற்றில் சிபி- அக்‌ஷராவின் கண்ணாடியாகவும், இசைவாணி - இமான், பாவ்னி - ராஜு , பிரியங்கா - தாமரை, ஐக்கி - வருண், நிரூப் - அபினய் கண்ணாடியாகவும் பிரியுமாறு அறிவிக்கப்பட்டது. இதில் ஒவ்வொருவரும் தங்களது ஜோடி போலவே செய்து அசத்தினர். மேலும் கைக்கோர்த்து நின்று ஒருவர் பற்றிய கருத்துக்களை முகத்திற்கு நேராக பேசினர். இதில் தாமரை குறித்து பிரியங்கா பேசினார். அப்போது பெரும்பாலும் அவர் குறித்த நல்ல விஷயங்களை மட்டும் தான் பிரியங்கா பேசினார். தாமரை நன்கு விளையாடி வருவதாகும் பிரியங்கா கூறினார்.

    இரண்டாவது சுற்றில் அபினய் - சிபியின் கண்ணாடியாகவும், இமான் - ஐக்கியின் கண்ணாடியாகவும், வருண் - நிரூப்பின் கண்ணாடியாகவும், ராஜு - பிரியங்காவின் கண்ணாடியாகவும், அக்ஷ்ரா - பாவ்னியின் கண்ணாடியாகவும், தாமரை - இசைவாணியின் கண்ணாடியாகும் பிரதிபலித்தனர். இதனால் பிரியங்கா குறித்து தாமரை பேச வாய்ப்பு கிடைக்கவில்லை.

    இந்நிலையில் பிரியங்கா பேசியது குறித்து சனிக்கிழமை கேள்வி எழுப்பினார் கமல். அப்போது, தாமரை குறித்து நல்ல விதமாக மட்டும் பேசியது, விட்டு கொடுத்தீர்களா? அல்லது அது விளையாட்டு யுக்தியா? என கமல், பிரியங்காவிடம் கேட்டார். அதற்கு பிரியங்கா இல்லை என கூற, அப்போது குறுக்கிட்ட தாமரை எனக்கும் பாசம் இருக்கிறது சார், ஆனால் பிரியங்கா இடத்தில் நான் இருந்தால் வேறு மாதிரி பேசியிருப்பேன் என்றார்.

    அபிஷேக் மீது நீங்கள் பாசமாக இருந்தீர்கள், ஆனால் உங்கள் மீது பாசமாக இருந்த நபர் நான் தான். அப்படி ஒருத்தர் மீது நீ பாசமாக இருந்தாயா என எனக்கு தெரியவில்லை, ஆனால் வில்லி சரியான வில்லி என பிரியங்காவை பற்றி கூறினார் தாமரை. தாமரை பிக் பாஸ் நிகழ்ச்க்கு வந்த போது வெகுளியாக இருந்தார், அப்போது பிரியங்கா அவரை அழைத்து அறிவுரை கூறுவார். இதனை தாமரையையே அடிக்கடி கூறியும் இருக்கிறார். இந்த நிலையில் அவர் பிரியங்காவை இப்படி பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: