• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் உயரும் சம்பளம்... இந்த முறை கமல் ஹாசன் பெறும் தொகை எவ்வளவு தெரியுமா?

ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் உயரும் சம்பளம்... இந்த முறை கமல் ஹாசன் பெறும் தொகை எவ்வளவு தெரியுமா?

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

ஒவ்வொரு சீசனிலும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை நிகழ்ச்சியில் கமல் கலந்துக் கொள்வார்.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் ஹாசனுக்கு இந்த முறை கொடுக்கப்படும் சம்பளம் எவ்வளவு என்று தெரிந்தால், ஆச்சர்யப்பட்டு போவீர்கள்.

    இந்தியில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி, கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் தனது ஒளிபரப்பை தொடங்கியது. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியின் 5-ம் சீசன் விரைவில் தொடங்கவிருக்கிறது. கடந்த 4 சீசன்களைப் போல இந்த சீசனையும் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதற்கான ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

    எப்போதும் போல பிக் பாஸ் 5-ல் கலந்துக் கொள்ளும் பிரபலங்கள் பட்டியல் நாள்தோறும் இணையத்தில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் நிகழ்ச்சியின் முதல் நாளில் கமல் ஹாசன் அறிமுகப்படுத்தும் போது தான், உறுதியாக தெரிய வரும்.

    இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக கமல் பெறும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிக்பாஸ் சீசன் 5-ல் கமல்ஹாசனுக்கு சம்பளமாகப் பேசப்பட்டிருக்கும் தொகை ஒருநாள் ஷூட்டுக்கு 4 கோடி ரூபாய். ஒவ்வொரு சீசனிலும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை நிகழ்ச்சியில் கமல் கலந்துக் கொள்வார். நிகழ்ச்சி இரண்டு நாள் ஒளிபரப்பானாலும், கமலுக்கு அது ஒரே நாள் ஷூட் தான். அந்த வகையில் அவரின் ஒருநாள் கால்ஷீட் 4 கோடி ரூபாய்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பிக்பாஸ் சீசனுக்கு கமல்ஹாசனின் மொத்த கால்ஷீட் 15 நாட்கள். அதன்படி பிக்பாஸ் 5 சீசனுக்கு 60 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார் கமல். முதல் சீசனில் கமல்ஹாசனின் 1 நாள் கால்ஷீட் 1 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: