• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • விவாகரத்தில் முடிந்த திருமணம்.. பாவனிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்! பிக் பாஸ் இசைவாணியின் சொல்லப்படாத கதை

விவாகரத்தில் முடிந்த திருமணம்.. பாவனிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்! பிக் பாஸ் இசைவாணியின் சொல்லப்படாத கதை

பிக் பாஸ் இசைவாணி

பிக் பாஸ் இசைவாணி

பாவனி தனது திருமணம் குறித்து பேசி கண்ணீர் சிந்தும் போது இசை, அவரிடம் தன்னுடைய திருமணமும் விவாகரத்தில் முடிந்ததாக பகிர்ந்து கொண்டார்.

 • Share this:
  முதல் வார நாமினேஷனில் ஹவுஸ்மேட்ஸ் விரும்பாத போட்டியாளராக மாறியிருக்கும் இசைவாணி பற்றி பலருக்கும் தெரியாத தகவல்கள்.

  பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கானா பாடகி இசைவாணி முதல் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றார். இவர் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. காரணம், பெண்களுக்கு அதிகம் பரீட்சையம் இல்லாத கானா துறையில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். அதுமட்டுமில்லை இவர் பாடிய ஐயப்பா படல் சோஷியல் மீடியாவில் மிக பெரிய அளவில் வைரலானது. வட சென்னையைச் சேர்ந்த இவர் பெஸ்ட் கேர்ள் என பிபிசி தேர்வு செய்துள்ளது.இதுப்போன்ற பல அடையாளங்கள் மற்றும் சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆன இசைவாணி பிக் பாஸ் வீட்டில் அதிகம் விரும்படாத போட்டியளராக தற்போது மாறியுள்ளார். முதல் வாரத்தில் இருந்த இசைவாணிக்கு இப்போது இருக்கும் இசைக்கும் நிறைய வித்யாசம் இருப்பதாக ஹவுஸ் மேட்ஸ் கூறுகின்றனர்.

  ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்கில் இவரின் வாழ்க்கை பயணம் பலரையும் அழ வைத்திருந்தது. அவர் சந்தித்த கஷ்டங்களையும் அதை போக்க யாரும் உதவாததையும் எண்ணி கண்ணீர் சிந்தினார். இசைவாணியின் தந்தை ஹார்மோனிய கலைஞர். சில காலம் துறைமுகத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் திடீரென அவருக்கு வேலையிழப்பு ஏற்பட்டது. இதனால் குடும்பமே நிலைக்குலைந்தது. வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் ஹவுஸ் ஓனர் சண்டை போடுவார், பின்னர் காலி செய்துவிட்டு வேறு வீடு, அங்கும் வாடகை பிரச்சினை, அடுத்து காலி செய்துவிட்டு இன்னொரு வீடு என வாழ்ந்து வந்த இசைவாணிக்கு இன்று வரை சொந்த வீடு இல்லை என்றார்.இதுப்போல் பல விஷயங்களை ஷேர் செய்து இருந்தார். கூடவே ஒருவருக்கு கல்வியை கொடுத்தால் அது அந்த தலைமுறையின் வாழ்க்கைக்கே ஒளி காட்டியதாகும் என அழுத்தமான கருத்தையும் பதிவு செய்திருந்தார்.

  ஆனால் இந்த டாஸ்கில் இசை வாணி குறிப்பிட்ட மறந்த ஒரு விஷயம் என்னவென்றால் அவரின் முறிந்து போன திருமண வாழ்க்கை குறித்து தான். இசைவாணியின் முன்னாள் கணவரும் கானா பாடகர் தான். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டர். ஒரே வீட்டில் வாழ்ந்து தங்களது துறையிலும் பிஸியாக இருந்து வந்தனர். இந்நிலையில் திருமணம் ஆன சில ஆண்டுகளில் அவர் கணவரை விட்டி பிரிந்து தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சம்பவத்தை இசைவாணி மறைக்க வேண்டும் என்ற நோக்கில் இருந்ததாக தெரியவில்லை. விவாகரத்தை விட தனது குடும்ப வறுமை பற்றி பேசுவதே சிறந்தது என நினைத்தாரோ என்னவோ? அதே நேரம் பாவனி தனது திருமணம் குறித்து பேசி கண்ணீர் சிந்தும் போது இசை, அவரிடம் தன்னுடைய திருமணமும் விவாகரத்தில் முடிந்ததாக பகிர்ந்து கொண்டார்.  தற்போது நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் இசைவாணி பிக் பாஸ் போட்டியாளர்கள் மனதை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்கள் மனதை வென்று பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து இருப்பாரா? என்பதை இந்த வாரத்தின் இறுதியில் தான் தெரிந்து கொள்ள முடியும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: