ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸில் பிரியங்கா ஆடும் ஆட்டம் என்ன? கமல் முன்பு போட்டுடைக்கும் அமீர்!

பிக் பாஸில் பிரியங்கா ஆடும் ஆட்டம் என்ன? கமல் முன்பு போட்டுடைக்கும் அமீர்!

பிக் பாஸ் பிரியங்கா

பிக் பாஸ் பிரியங்கா

பிரியங்கா, நான் ஒரு ஸ்ட்ராங் போட்டியாளர் என கூற, அதற்கு கமல் நான் ஒரு ஸ்ட்ராங் போட்டியாளர், நான் ஒரு சிறந்த நடிகர் என்பதை ரசிகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறும் காட்சிகள் உள்ளது.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி தற்போது வெற்றிகரமாக 60 நாட்களை நெருங்கியுள்ளது. 18 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் தற்போது சிபி, ராஜு, இமான் அண்ணாச்சி, வருண், நிரூப், அமீர், சஞ்சீவ், அபினய், அபிஷேக், பாவ்னி, பிரியங்கா, அக்ஷரா, தாமரை என 13 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளனர். இவர்களில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில், ராஜு, பிரியங்கா, தாமரை, சிபி, இமான், பாவ்னி, அக்ஷ்ரா, வருண், அபினய் மற்றும் அபிஷேக் ஆகிய 10 பேர் உள்ளனர். இவர்களில் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

  இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் கொரோனோவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த வாரம் யார் தொகுத்து வழங்குவார் என்ற சந்தேகம் இருந்த நிலையில், இன்றைய முதல் ப்ரோமோவில் இன்று கமல் தொகுத்து வழங்குவது உறுதியாகியுள்ளது.

  இரண்டாவது ப்ரோமோவில், இமான் சரியாக வேலை செய்ததாக பிரியங்கா கூறிய விவகாரம் குறித்து கமல் விவாதிக்கிறார். இதுக்குறித்து தாமரையிடம் கேள்வி எழுப்பிய நிலையில், அவர் இமான் அனைத்து வேலையையும் செய்கிறார் என கூறுகிறார். இதனை தொடர்ந்து பேசும் ராஜு, பிரியங்கா - தாமரை தொல்லை தாங்க முடியவில்லை, இருவரும் சண்டை போட்டு கொண்டே இருக்கின்றனர் என்கிறார். அதற்கு தாமரை பிரச்சனையே இவனால் தான் சார் என கூறும் காட்சிகள் உள்ளது.

  இந்தநிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், அமீரிடம் கேள்வி எழுப்பும் கமல், பிரியங்காவிடம் சொல்ல நினைத்து சொல்லாமல் போன தகவல் குறித்து இப்போது சொல்லலாம் என்கிறார். அதற்கு அமீர், பிரியங்கா, அபிஷேக்கை நம்பி முழுமையாக ஸ்பாயில் ஆகி கொண்டிருக்கிறார் என்கிறார், மேலும் கூடவே இருந்து சில பேர் குழி வெட்டி, அபிஷேக், பிரியங்காவை ஏத்தி விட்டு அவருக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுக்கிறார் என்கிறார்.

  ' isDesktop="true" id="630937" youtubeid="Cqu25Vv5K6g" category="television">

  இதற்கு ரசிகர்கள் பலமாக கை தட்டுகின்றனர். இதனை தொடர்ந்து பிரியங்கா, நான் ஒரு ஸ்ட்ராங் போட்டியாளர் என கூற, அதற்கு கமல் நான் ஒரு ஸ்ட்ராங் போட்டியாளர், நான் ஒரு சிறந்த நடிகர் என்பதை ரசிகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறும் காட்சிகள் உள்ளது. முன்னதாக நேற்றைய நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு அட்வைஸ் செய்து கொண்டிருந்த அமீர், நிரூப், அபிஷேக்கிற்காக விளையாடி விளையாடி உன் ஒரிஜினாலிட்டியைக் கெடுத்துக்கறே என்று சுட்டிக் காட்டியது குறிப்பிடத்தக்கது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil 5, Vijay tv