Home /News /entertainment /

பிக் பாஸ் 5-ன் கடைசி எலிமினேஷன் யார் தெரியுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிக் பாஸ் 5-ன் கடைசி எலிமினேஷன் யார் தெரியுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிக் பாஸ் தமிழ்

பிக் பாஸ் தமிழ்

தற்போது இந்த நிகழ்ச்சியில் ராஜு ஜெயமோகன், பிரியங்கா, பாவ்னி, தாமரை செல்வி, நிரூப், அமீர் ஆகிய 6 பேரும் இருக்கிறார்கள்.

    விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் தொடங்கி 95 நாட்களை கடந்து சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகும் சென்று கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியின் பைனல் அடுத்த வாரம் என்பதால் இறுதி கட்டத்திற்கு செல்லும் அந்த 5 போட்டியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

    கடந்த 4 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவ்னி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சி தனிப்பட்ட காரணங்களுக்கான நமீதா மாரிமுத்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் வாரத்தில் குறைந்த வாக்குகள் பெற்றதால் நாடியா வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து பிரபல யூடியூபரான அபிஷேக் ராஜா இரண்டாவது நபராக வெளியேற்றப்பட்டார். பின்னர் சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி, அபிநய் ஆகியோர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில் டபுள் எலிமினேஷன் நடைபெற்றது. அதில் வருண் மற்றும் அக்ஷ்ரா ஒரே நாளில் வெளியேறினர்.

    இதனிடையே முதல் வைல்டு கார்டு எண்ட்ரியாக அபிஷேக் ராஜா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் வருகை தந்தார். இவரை தொடர்ந்து சஞ்சீவ் மற்றும் அமீர் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்தனர். ஆனால் அபிஷேக் ராஜா வந்த இரண்டாவது வாரத்திலேயே மீண்டும் வெளியேற்றப்பட்டார். கடந்த வாரம் சஞ்சீவ் வெளியேறினார். இதில் அமீர் தடைகளை உடைத்து டிக்கெட் டு பின்னாலே வெற்றி பெற்று நேரடியாக இறுதி போட்டிக்கு முதல் நபராக சென்றுள்ளார்.

    இதனால் தற்போது இந்த நிகழ்ச்சியில் ராஜு ஜெயமோகன், பிரியங்கா, பாவ்னி, தாமரை செல்வி, சிபி, நிரூப், மற்றும் அமீர் ஆகிய 7 போட்டியாளர்கள் இருந்தனர். இதில் இந்த வாரம் சூட்கேசில் பணம் கொடுக்கும் டாஸ்க் வழங்கப்பட்டது. முதல் ரூ.3 லட்சமாக கொடுக்கப்பட்ட இந்த தொகையானது இறுதியாக ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்த ரூ. 12 லட்சத்தை எடுத்து கொண்டு சிபி நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இந்த வாரம் கடைசி நாமினேஷன் என்பதால் அமீரை தவிர மீதமுள்ள 5 போட்டியாளர்களும் நாமினேஷன் பட்டியலில் உள்ளனர்.

    இதில் வழக்கம் போல ராஜு மற்றும் பிரியங்கா முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். சிபி மூன்றாவது இடத்தில் இருந்த நிலையில் அவர் வெளியேறிய பின்னர் தாமரை 3-வது இடத்தில் நீட்டிக்கிறார். இவரை தொடர்ந்து பாவனி 4-ம் இடத்திலும், நிரூப் 5-வது இடத்திலும் உள்ளனர். எனவே இந்த வாரம் நிரூப் வெளியேற வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ராஜு, பிரியங்கா, தாமரை, அமீர், பாவ்னி ஆகிய 5 பேரும் தான் பிக் பாஸ் சீசன் 5-ன் பைனலுக்கு நுழைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி