Home /News /entertainment /

பிக் பாஸ் 5ல் இன்னும் பல ட்விஸ்ட்டுகள் இருக்கின்றன .. சொன்னது யார் தெரியுமா?

பிக் பாஸ் 5ல் இன்னும் பல ட்விஸ்ட்டுகள் இருக்கின்றன .. சொன்னது யார் தெரியுமா?

பிக் பாஸ்

பிக் பாஸ்

இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

    பிக் பாஸ் சீசன் 5ன் இறுதி நாமினேஷன் இந்த வாரம் நடை பெற இருக்கிறது. இந்த சீசன் முடிய ஒரே வாரம் இருக்கையில், ஆட்டம் சூடுபிடித்துள்ளது. இந்த வார நாட்களில் விறுவிறுப்பான சூட்கேஸ் டாஸ்க் மற்றும் dare டாஸ்க் நடைபெற்றது.

    சூட்கேஸ் டாஸ்க் அதாவது பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு செல்வது யார் என்று டாஸ்க் சுவாரஸ்யமாகச் சென்றது. பணத்தை எடுத்துச் செல்ல தாமரையை பயங்கரமாக தூண்டி விட்டுக் கொண்டிருந்தார் நிரூப். அமீர், தான் பணத்தை எடுத்துக் கொண்டு செல்வதாக எல்லாரிடமும் தனித்தனியாக சொல்லிக்கொண்டு கடைசியில் பிராங்க்தான் செய்தேன் என்று ஹவுஸ்மேட்சை கடுப்பாக்கினார். இறுதி வாரம் வரை வருவார், மற்றும் ஜெயிக்கும் சாத்தியமும் இருக்கிறது என்று எதிர்பார்க்கப்பட்ட சிபி, பணப்பெட்டியின் மதிப்பு 12 லட்ச ரூபாயாக உயர்த்திய கொஞ்ச நேரத்திலேயே பெட்டியை எடுத்துக் கொண்டு, வீட்டிலிருந்து வெளியேறி விட்டார்.

    நேற்று நடைபெற்ற டாஸ்க்கில், வீட்டில் இருக்கும் அனைவரும் சேர்ந்து இரண்டாவது நேரடி ஃபைனலிஸ்ட்டாக ஒருவரை பைனலுக்கு அனுப்ப முடிவு செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் கூறினார். ஆனால் யாருமே யாரையுமே ஒருமனதாகத் தேர்வு செய்யவில்லை. அதனால், பிக் பாஸ் யாரையாவது ஒருவரை வெளியேறுவதற்காக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அறிவித்தார். அப்போது  ராஜூ பிரியங்காவை வெளியேற்ற திட்டம் போட்டார்.

    இதையும் படிங்க.. அருள் வாக்கு சொன்ன சாமியார்... உடனே திருந்திய சீரியல் ஹீரோ!

    இன்னும் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஹவுஸ்மேட்ஸ்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வெளியேற்றுவது யாராக இருக்கும் என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும், அடுத்ததாக தாமரை அல்லது பாவனி வெளியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது வெளியான புரோமோவில், தொகுப்பாளர் கமலஹாசன் இந்த வாரம் நடந்த அதிரடி திருப்பங்கள் மற்றும் முடிவுகளைக் கோடிட்டுக் காட்டி, இன்னும் சில ஆச்சரியங்களையும் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க.. சின்னத்திரையை கலக்கும் டாப் 10 சீரியல் ஹீரோக்கள் .. லிஸ்டில் மிஸ்ஸான விஜய் டிவி சீரியல் நடிகர்!

    ”எதிர்பாராததை எதிர்பார்த்தே பழகிவிட்டாலும், அதையும் கடந்து பல திருப்பங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. அதில், ஸ்ட்ராங்கான போட்டியாளர்கள் என்று கருதப்பட்டவர்கள் நேரடி ஃபைனலிஸ்ட்டாக முடியாமல் போனதைப் பற்றியும், எதிர்பாராத இரண்டு நபர்கள் ஃபைனலிஸ்ட்டாக தேர்வாகி இருப்பதையும் கூறியதாகக் காட்சிகள் உள்ளன. ஃபினாலேக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், கூடுதல் ஆச்சரியங்களும் நாம் எதிர்பார்க்கலாம்” என்று கூறியிருக்கிறார்.

    இன்றைய புரோமோ இங்கே:



    அமீர் நேரடி ஃபைனலிஸ்ட்டாக முதலில் தேர்வாகி இருந்த நிலையில், நேற்றைய எபிசோடில் நிரூப்பும் தேர்வு செய்யப்பட்டார். எலிமினேஷன் பட்டியலில், தாமரை, பாவனி, ராஜு மற்றும் பிரியங்கா ஆகிய நால்வர் உள்ளனர். யார் எலிமினேட் ஆகப் போகிறார்கள் என்பது நாளை தெரிந்து விடும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி